Tamilnadu
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் அமைப்பது குறித்து திமுக மாநிலங்கலவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர் இதுவரை முடிவு செய்யப்பட்டுள்ள நிலையங்களின் எண்ணிக்கை, 2025-26 ஆம் ஆண்டுக்கான இலக்குகள் மற்றும் சார்ஜிங் நிலையங்களில் சீரான விநியோகம், தரம் மேம்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் கேட்டுள்ளார்.
பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகள் வசதியாக புழங்குவதற்கான நடவடிக்கை என்ன?
பொது போக்குவரத்து, அரசு கட்டிடங்கள் முதலியவை மாற்றுத் திறனாளிகள் புழங்குவதற்கான தடையற்ற சூழலை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட எஸ்.பி.ஏ- 2015 பிரச்சார திட்டத்தின்கீழ் இதுவரை செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்திட்டம் முறையாக இலக்கை அடைந்திருக்கிறதா? திட்டத்தின் வெற்றியை மதிப்பிடுவதற்கு அரசு எடுத்த ஆய்வு நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட மானியங்கள் எவ்வளவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை உருவாக்கும் துணைத் திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் பற்றிய விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
Also Read
-
இளம் பெண் அடுத்து படுகொலை : பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்தில் கொடூரம்!
-
“வள்ளுவர் பிறந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் நாம்!”: அயலகத் தமிழர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னையில் இரட்டைத் தள மின்சார பேருந்து சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சி தொடரும்” : கனிமொழி எம்.பி உறுதி!
-
“இது பேரறிஞர் அண்ணா பற்றவைத்த தீ! தலைமுறை, தலைமுறையாக பரவிக்கொண்டிருக்கும் தீ!”: துணை முதலமைச்சர் பேச்சு!