Tamilnadu

Two Way-ஆக மாறும் ஆழ்வார்பேட்டை மேம்பாலம்... சென்னை TTK சாலையில் போக்குவரத்து மாற்றம் - விவரம் உள்ளே !

போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விவரம் :

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் பழுதடைந்த மழை நீர் வடிகால் பணி TTK சாலையில் ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலை வரை 230 மீட்டர் வரை நடைபெற இருப்பதால், 11.08.2025 முதல் ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிச்சாலை ஆக போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

TTK சாலை (Incoming)-ல் மியூசிக் அகடாமி நோக்கி வரும் MTC பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையை பயன்படுத்தி ஆழ்வார்பேட்டை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முர்ரேஸ் கேட் சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி சேஷாத்ரி சாலை மற்றும் கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

TTK சாலை (Incoming)-ல் மயிலாப்பூர் நோக்கி வரும் MTC பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையை பயன்படுத்தி ஆழ்வார்பேட்டை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி லஸ் சர்ச் சாலை மற்றும் முசிறி சுப்பிரமணியம் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி பி.எஸ் சிவசாமி சாலை வழியாக சென்று வழக்கம்போல் தங்கள் இலக்கை அடையலாம்.

TTK சாலை (Outgoing)-ல் ஆழ்வார்பேட்டை நோக்கி MTC பேருந்துகள் கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திற்கு பதிலாக சர்வீஸ் சாலையை பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

Also Read: Ticket கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரயில்வே- பயன்படுத்துவது எப்படி?