Tamilnadu
”வாக்கு திருட்டு குறித்து வாய்மூடி கிடக்கும் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!
முத்தமிழறிஞர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ’போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் சென்னையில் 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ”ஆகஸ்ட் என்றால் சுதந்திர தினம்தான் முன்பு எல்லோருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் தற்போது ஆகஸ்ட் 7 என்ற தேதி தமிழ்நாட்டு மக்கள் மனதில் நீங்காத நாளாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் முதன்மை மாநிலமாக உள்ளது. இப்படிப்பட்ட தமிழ்நாட்டை கட்டமைத்து எங்கும் நிறைந்து இருக்கிறார் கலைஞர்." என புகழாரம் சூட்டியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,”சம்பாதித்ததை காப்போம், சம்மந்திகளை மீட்போம் என்ற வகையில்தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு பயணம் இருக்கிறது. வாக்கு திருட்டு குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல் வாய்மூடி மவுனமாக இருக்கிறார் பழனிச்சாமி.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கல்வி உரிமைக்காக பாடுபட்ட அறவழிப் போராளி முனைவர் வசந்திதேவி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
"பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது" - செல்வப்பெருந்தகை விமர்சனம் !
-
இந்தியன் வங்கி தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்! : 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல்!
-
Two Way-ஆக மாறும் ஆழ்வார்பேட்டை மேம்பாலம்... சென்னை TTK சாலையில் போக்குவரத்து மாற்றம் - விவரம் உள்ளே !
-
Ticket கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரயில்வே- பயன்படுத்துவது எப்படி?