Tamilnadu
தூத்துக்குடியில் ‘வின் ஃபாஸ்ட்’ மின்சார வாகன தொழிற்சாலை : முதலமைச்சர் நாளை (ஆகஸ்ட் 4) திறந்து வைக்கிறார்!
தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.
இந்த தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ஆயிரத்து 119 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், பரிசோதனைக் கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சார கார்கள் இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்நிலையில், நாளை (ஆக்ஸ்ட் 4) தூத்துக்குடி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வின் ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்க மஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில், உலக முதலீட்டாளர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, பல்வேறு புதிய தொழில் முதலீட்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!