Tamilnadu
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகள்! : மருத்துவமனையிலிருந்து ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (23.7.2025) காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகு மீனா, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப., ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, முதலமைச்சர் அவர்கள் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, இதுவரை அம்மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்டறிந்தார்.
அத்துடன் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மனுக்கள் அளிக்க வருகை தந்த பயனாளிகளிடம் முதலமைச்சர் அவர்கள் காணொலி வாயிலாக கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
“உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த பயனாளிகள் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Also Read
-
ஜெகதீப் தன்கர் ராஜினாமா : பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் நாக்பூர் மேலிடம்? - முரசொலி தலையங்கம்!
-
“திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்கு தரமான காலை உணவு! தரமான கல்வி!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் ரயில் கட்டண உயர்வு : நாடாளுமன்றத்தில் திமுக MPக்கள் கண்டனம்!
-
“தொடரும் இரயில் விபத்துகளுக்கு ஒன்றிய அரசின் நடவடிக்கை என்ன?” : நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்கள் கேள்வி!
-
6 மாதங்களில் 2 இலட்சம் மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்! : சென்னை மாநகராட்சி தகவல்!