Tamilnadu

தமிழறிஞர் பெருமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! : தமிழ்நாடு அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்!

பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது.

அவ்வகையில் எதிர்வரும் 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கும், 2025-ஆம் ஆண்டுக்கான 73 விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வேண்டப்படுகின்றன.

விருதுகளின் அணிவரிசை:-

அறிஞர் பெருமக்கள் www.tamilvalarchithurai.tn.gov.in/awards மற்றும் http://awards.tn.gov.in என்ற இணைய தளங்களின் வழியாகவோ அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழுமூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 03.09.2025ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகின்றோம்.

தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது. தமிழ்ச் செம்மல் விருதிற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் அலுவலகங்களின் வாயிலாக விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044- 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (03.09.2025) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை அறிஞர் பெருமக்கள் நினைவிற் கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்.

Also Read: இந்தியாவின் முதல் ‘இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம்’ தமிழ்நாட்டில் அமைகிறது! : எங்கு? எப்போது?