Tamilnadu
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தரம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயில் கடந்த 8 மணிநேரமாக கொழுந்துவிட்டு எரிந்து வந்தது. இவ்விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படாத நிலையில், மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தடம் புரண்டது. தடம் புரண்டதும் இன்ஜினில் இருந்து மூன்றாவது பெட்டியில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு தீ பற்றி, உடன் அடுத்த 18 பெட்டிக்கும் தீ பரவியது.
ஒரு பெட்டியில் சுமார் 54 டன் கச்சா எண்ணெய் நிரப்பப்பட்டிருந்த நிலையில் ஒட்டுமொத்தமாக 18 பெட்டியில் 900 டன் அளவிற்கு கச்சா எண்ணெய் எரிந்து தீ பற்றி எரிந்தது. தீ பற்றியதன் காரணமாக சென்னை அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் செல்லும் வந்தே பாரத் சதாப்தி உள்ளிட்ட 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் மொத்தமுள்ள நான்கு தண்டவாளங்களில் மூன்று தண்டவாளங்கள் முழுமையாக 200 மீட்டர் அளவிற்கு சேதம் ஆகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் 8 மணி நேர முயற்சிக்குப் பிறகு 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Also Read
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!