Tamilnadu
மாற்றுத்திறனாளிகள் மாமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற விண்ணப்பிக்கலாம்! : முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, (தமிழ்நாடு சட்டம். 9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025 -ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1) (i-a) ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி/ நகராட்சி/மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி https://chennaicorporation.gov.in என்ற இணையதள மாமன்றத்திற்கு முகவரியிலும், பிற மாநகராட்சி/நகராட்சி மன்றத்திற்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும்;
பேரூராட்சி மன்றத்திற்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் 1/07/2025 முதல் 17/07/2025 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பேரூராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடம் சமர்பிக்கலாம்.
நகராட்சி/மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி/மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் 17/07/2025 அன்று மாலை 03.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Also Read
-
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!