Tamilnadu
சிவகங்கை இளைஞர் மரண வழக்கு : சம்மந்தப்பட்ட காவலர்கள் கைது - அதிரடி நடவடிக்கை!
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காவல் நிலைய மரணத்தில் சம்மந்தப்பட்ட காவலர்கள் அனைவரையும் கைது செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் விவரம் வருமாறு:-
சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு காவல் ஆளிநர்கள் உடனடியாக 28.06.2025அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்று இரவு கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி, உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், இவ்வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, இச்சம்பவத்தில் தொடர்புடைய
ஐந்து காவல் ஆளிநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் Bharatiya Nagarik SurakshaSanhita (BNSS) Act ன் பிரிவு எண். 196(2)(a) ன் கீழ், குற்ற எண். 303/2025 ல் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கடந்தகாலங்களை ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணையை CBCIDக்கு மாற்றி காவல்துறை டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மாவட்ட எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மானாமதுரை டி.எஸ்.பி சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !
-
“ஓரணியில் தமிழ்நாடு” - வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் பரப்புரை - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய பொதுமக்கள்!
-
“தடித்த தோலுக்கு ‘மன்னிப்பின்’ மகத்துவம் தெரியுமா?” - பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி கட்டுரை!
-
“இதுதான் உண்மையான சமநீதி - சமூகநீதி” : ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் குறித்து முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!
-
"இளைஞர் அஜித்குமார் விவகாரத்தில் சாத்தான் வேதம் ஓதும் பழனிசாமி" : ஆர்.எஸ். பாரதி பதிலடி!