Tamilnadu
இனி கும்மிடிபூண்டி, சூலூருபேட்டைக்கு 12 பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு !
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரல் கும்மிடிபூண்டி / சூலூருபேட்டை வழித்தடங்களில் மட்டும் 9 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் பயன்பாட்டில் இருந்தது.
இந்த நிலையில், தற்போது சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்டு வந்த அனைத்து 9 பெட்டி (9 CAR RAKE) புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டி (12 CAR RAKE) ரயில்களாக மாற்றி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், "சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்டு வந்த அனைத்து 9 பெட்டி (9 CAR RAKE) புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டி (12 CAR RAKE) ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது
சென்னை ரயில்வே கோட்டத்தில் இதுவரை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரல் கும்மிடிபூண்டி / சூலூருபேட்டை வழித்தடங்களில் பயன்பாட்டில் இருந்த அனைத்து 9 பெட்டி புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டி ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கீழ்க்கண்ட வழித்தடங்களில் ஓடும் அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் இப்போது 12 பெட்டி ரயில்களாக இயக்கப்படுகின்றன:
• சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பிரிவு,
• சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பிரிவு மற்றும்
• சென்னை சென்ட்ரல் – கும்மிடிபூண்டி / சூலூருபேட்டை பிரிவு.
தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் தினசரி 12 லட்சம் பேர் ரயிலில் பயணிக்கின்றனர். இதில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 9 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதால், 4 லட்சம் கூடுதல் பயணிகளுக்கு இடவசதி கிடைக்கும் (21% கூடுதல் பயணிகள் பயணிக்க முடியும்). இதனால் கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் நெரிசல் குறைவதோடு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் மேற்கொள்ள வழிவகுக்கும்.
சென்னை ரயில்வே கோட்டம் பயணிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவது மட்டுமமல்லாமல் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்புக்கும் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வருகிறது"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?