Tamilnadu

கத்திப்பாரா மேம்பாலம் மீது கட்டப்படும் மெட்ரோ ரயில் திட்டம்... அனிமேஷன் காட்சிகள் வெளியீடு !

கத்திப்பாரா மேம்பாலம்  மீது சென்னை மெட்ரோ ரயில் Ph-2 பாலத்தின் அனிமேஷன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. 120 மீட்டர் சுற்றளவு கொண்ட கூர்மையான வளைவில் கட்டப்பட்ட இந்தியாவிலேயே மிக நீளமானதாக இருக்கும் வகையில் இந்த பாலம் அமைந்துள்ளது. .

கத்திப்பாரா பகுதியில் நெடுஞ்சாலை துறையின் மேம்பாலம், மெட்ரோ வழித்தடம்-1 மற்றும் 2ம் வழித்தடம் அமையப் பெற்றுள்ளமையால், சமச்சீர் காண்டிலீவர் எனப்படும் கட்டமைப்பின் கீழ் சாரக்கட்டு அமைப்புகள் ஏற்படுத்தாமல் கட்டுமானத்தை செயல்படுத்தும் ஒரு சிறப்பு கட்டுமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

கத்திப்பாரா பகுதியில் 120 மீட்டர் ஆரம் வளைவுடன் 5 தொடர்ச்சியான பிசிஎம் ஸ்பான்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. தண்டவாளங்கள் தரை மட்டத்திலிருந்து 31 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. பின்னர் அவைகள் சுரங்கப்பாதை வழியாக தரையை அடைந்து, அங்கிருந்து கத்திப்பாரா மேம்பாலம், மெட்ரோ வழித்தடம் 1 மற்றும் 2 வழியே செல்கிறது. மொத்த பிசிஎம் நீளம் 413 மீட்டர். மொத்தம் 6 தூண்கள் மற்றும் 10 தூண்கள் இடையிலான கூறுகள் கொண்டதாகும்.

இதுவரை 80 கூறுகளில் 30 கூறுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2025 டிசம்பர் மாதத்திற்குள் ஆலந்தூர் வரையிலான வழித்தடப் பகுதி முடிவுறும் என கணக்கிடப்பட்டுள்ளது. கத்திப்பாரா பகுதியில் ஏற்கனவே அமையப் பெற்றிருக்கும் முதல் மற்றும் 2ம் வழித்தடம் மற்றும் கத்திப்பாரா மேம்பாலம் உள்ளடக்கிய சந்திப்பில் சமச்சீர் காண்டிலீவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்து தமிழக முதலமைச்சரிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் அர்சுனன் நேற்று முன்தினம் கிண்டி மெட்ரோ ரயில் பணிகள் குறித்த ஆய்வின் போது விளக்கியுள்ளார். இதனிடையே கத்திப்பாரா மேம்பாலம் அருகில் மெட்ரோ ரயில் பணிகள் அமைப்பதற்கான அனிமேஷன் வெளியிடப்பட்டுள்ளது.

Also Read: ரூ.17,154 கோடியில் 9,620 கி.மீ நீளச் சாலைகள் : நெடுஞ்சாலைத் துறையின் சாதனைகளை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!