Tamilnadu
கிண்டி ரேஸ் கிளப் மைதான குளத்தை அகலப்படுத்தும் பணி தொடக்கம்... இரு மடங்கு உயரும் நீர் கொள்ளளவு !
கிண்டியில் 160 ஏக்கரில் அமைந்துள்ள ரேஸ் கிளப் மைதானம் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நடைமுறை சுதந்திரத்துக்கு பின்னரும் தொடர்ந்த நிலையில், ரேஸ் கிளப் நிர்வாகம் அரசுக்கு முறையாக வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்து வந்தது.
இதன் காரணமாக ரேஸ் கிளப் மைதானத்தை தமிழ்நாடு அரசு சமீபத்தில் கையப்படப்படுத்தியது. அதனைத் வேளச்சேரியில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பை தடுக்க கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் நீா்நிலையுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கலாம் என பசுமை தீா்ப்பாயம் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சாா்பில் மீட்கப்பட்ட நிலத்தில் 4.60 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட 4 குளங்கள் அமைக்கப்பட்டன. இதனிடையே இந்த நான்கு குளத்தின் கொள்ளளவை இரண்டு மடங்காக அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில் நான்கு குளத்தின் கரைகளை அகலப்பட்டுத்தியும், ஆழமாகவும் வெட்டப்பட்டு வருகிறது. இந்த நான்கு குளங்களிலும் சேர்த்து, தற்போது 4.60 மில்லியன் கன அடி மழைநீர் சேமிக்கப்படும் நிலையில், இதனை 8 மில்லியன் கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. இந்த பணிகளை வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்னர் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து மழை நீரை சேமிக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !