Tamilnadu
”அமித்ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம்!
ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தியை மூன்றாவது மொழியாகவும், அலுவல் மொழியாகவும் திணிக்கப்பார்க்கிறது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மற்றும் சமஸ்கிரத மொழியை பல்வேறு வடிவங்களில் திணிக்க முயற்சி செய்து வருகிறது.
இந்தி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குகூட அலுவல் கடிதங்களை இந்தியில் அனுப்பி, தங்களது இந்தி பாசத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்ற ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”ஆங்கிலம் மொழி இனி ஒரு காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல. அது முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி.
சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் அதை ஒரு காலனித்துவ மொழியாக பார்க்காமல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தின் முன்னேற்றத்திற்காக கற்பிக்கின்றன. வலுவான தேசிய பெருமையுடன் கூடிய சீனா கூட, ஆங்கிலத்தை வளர்ச்சிக்கு அவசியமானதாகக் கருதுகிறது.
ஆனால் இந்தியாவில், அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆங்கிலத்தை உயர்குடி மொழியாக சித்தரிக்க விரும்புகிறார்கள் . அது நமது கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அல்ல, மாறாக அது ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை எழுச்சி பெற அதிகாரம் அளிப்பதால்.
ஒரு காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததைப் போலவே, இப்போது அவர்கள் ஆங்கிலத்தை மக்களுக்கு எட்டாமல் வைத்திருக்க விரும்புகிறார்கள்.இது மொழி பற்றியது அல்ல - இது கட்டுப்பாட்டைப் பற்றியது.
தமிழ் அடையாளத்திற்காகவும், ஆங்கிலம் வாய்ப்பிற்காகவும் என்ற கொள்கையை தமிழ்நாடு பின்பற்றுகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. மொழி என்பது வளர்ச்சிக்கான ஏணியாக இருக்க வேண்டும் தவிர, தடைக் கல்லாக இருக்கக்கூடாது. அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல - அது சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!