Tamilnadu
நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி... அதிக மதிப்பெண் எடுத்தும் முதல் 100 இடங்களில் இடம்பெறாத கோவை மாணவி !
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு முடிவுகள் நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 மாணவா்கள் தரவரிசையில் முதல் 100 இடங்களில் இடம்பிடித்தனா்.
இந்த பட்டியலில் 680 மதிப்பெண்கள் எடுத்த கோயம்புத்தூர் மாணவி அபிஷியாக்கு 40 ஆவது ரேங்க் என தேர்வு முடிவுகள் கூறிய நிலையில், தேசிய தேர்வு முகமை வெளியிட்ட டாப் 100 இடங்களை பிடித்தவர்களின் பட்டியலில் மாணவி அபிஷியா பெயர் இடம் பெறவில்லை.
மேலும் 680 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு 88.296852 பர்சன்டைல் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 680 மதிப்பெண்கள் எடுத்தால் 99. 985 முதல் 99.997 வரையிலான பர்சன்டைல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவில் மாணவி எடுத்த மதிப்பெண்கள் அதற்காக வழங்கப்பட்ட பர்சன்டைல் மற்றும் ஆல் இந்திய தரவரிசை என முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாணவி தேசிய தேர்வு முகமை புகார் தெரிவிக்கும் மையத்தில் மின்னஞ்சல் மூலமாக புகார் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!