Tamilnadu
ஒன்றிய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.25,000 வரை கல்வி உதவித் தொகை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், 1-ம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2025-26 ஆம் நிதி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :
ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2025-26 ஆம் நிதி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2025-26 ஆம் நிதி ஆண்டில், ரூபாய் 1000/- முதல் ரூபாய் 25,000/- வரை, கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
https://scholarships.gov.in என்கிற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு (OTR) மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில், தங்களுடைய சேமிப்புக்கணக்கானது, தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.
இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், https://scholarships.gov.in என்ற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு, மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை, கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல், அடுத்தகட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது.
வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31/08/2025 மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31/10/2025.
மேற்கொண்டு விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு அணுகவும்:-
ஒன்றிய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு,
தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி, சென்னை – 600032.
மின்னஞ்சல் – wclwo.chn-mole@gov.in
தொலைபேசி எண்: 044-29530169
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?