Tamilnadu
அதிக வட்டிக்கு முட்டுக்கட்டையிட்ட தமிழ்நாடு அரசு! : மக்கள் வரவேற்பு!
இந்திய அளவில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், இணைய வழியில் கடன் வாங்கும் நடைமுறையும் அதிகரித்து வருகிறது.
இதனால், அவசர பணத்தேவை காரணமாக மக்கள் பல நிதி நிறுவனங்களிடம், கடன் வட்டி விவரங்களை விளக்கமாக விசாரிக்காமல் கடன் வாங்கி, நிதி நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, தனியார் வங்கிகள் உள்ளிட்ட சில நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் பொதுமக்கள், அதிகப்படியான வட்டி மற்றும் கடன் வசூல் மிரட்டல்கள் உள்ளிட்டவற்றால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
இந்த நடைமுறை தமிழ்நாட்டிலும் நிலவி வந்தது. இதனை போக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘கடன் வசூல் ஒழுங்கு சட்டம்’ என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது.
இம்மசோதாவில் கடன் வசூலிப்பதில் அத்துமீறல்கள், வலுக்கட்டாய நடவடிக்கைகள் இடம்பெற்றால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் பிணை இல்லை போன்ற வரையறைகள் இடம்பெற்றுள்ளன.
இதனால், அத்துமீறலில் ஈடுபடும் பல நிதி நிறுவனங்கள், தமிழ்நாட்டு மக்களிடையே ஒதுங்கி இருக்க முடிவெடுத்துள்ளன என வங்கி ஊழியர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!