Tamilnadu

ரூ.571.92 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற பணிகள் திறப்பு - 50 வாகனங்கள் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.5.2025) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 30 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் 11 முடிவுற்ற பணிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 188 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் 3 முடிவுற்ற பணிகள், நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 102 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவில் 19 முடிவுற்ற பணிகள், பேரூராட்சிகள் ஆணையரகத்தின் சார்பில் 77 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் 14 முடிவுற்ற பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 60 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் 2 முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 59 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப்பணிகள், நகராட்சி நிருவாகத் துறை சார்பில் 15 கோடியே 11 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகள், பேரூராட்சிகள் ஆணையரகத்தின் சார்பில் 18 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கூடுதலாக, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 19 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 50 புதிய வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் திறந்து வைக்கப்பட்ட பணிகளின் விவரங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மணலி மண்டலம், மாத்தூர், எம்.எம்.டி.ஏ., 59வது தெருவில் சென்னை தொடக்கப் பள்ளிக்கு புதியதாக பள்ளிக்கூடம் கட்டடம் கட்டும் பணி, மாதவரம் மண்டலம், வார்டு-33, பாரதியார் தெரு சென்னை மேனிலை பள்ளியில் கூடுதலாக 2வது தளத்தில் 4 வகுப்பறைகள், 2 கழிப்பறைகள் கட்டும் பணி, திரு.வி.நகர் மண்டலம், வார்டு-71ல் மாதவரம் நெடுஞ்சாலையில் புதியதாக சென்னை பெண்கள் மேல்நிலை & சென்னை நடுநிலை பள்ளியில் வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டும் பணி;

கோடம்பாக்கம் மண்டலம், பகுதி - 31, வார்டு - 132ல் ரங்கராஜபுரத்தில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி கட்டடம் (G+3 மாடிகள்) கட்டும் பணி, வளசரவாக்கம் மண்டலம், பகுதி–34, வார்டு–155இல் உள்ள ஈஸ்வரன் கோயில் தெருவில் சென்னை ஆரம்ப பள்ளி கட்டும் பணி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-46, பகுதி-11ல் உள்ள கல்யாணபுரம் சென்னை மேல்நிலை பள்ளியில் (G+3) 40 வகுப்பறைகள் படிக்கட்டு மற்றும் கழிப்பறை கட்டும் பணி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-44, பெரம்பூர், புதிய காமராஜர் நகரில் உள்ள சென்னை நடுநிலை பள்ளியில் 20 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் (G+3) தளங்கள், கழிவறை மற்றும் அங்கான்வாடி-1,2 கட்டும் பணிகள், மணலி மண்டலம், காமராஜர் சாலை மற்றும் மாதவரம் மண்டலம், வேலம்மாள் நகர் ஆகிய இடங்களில் 3.06 கோடி செலவில் 2 புகையில்லா எரிமேடைக் கட்டடங்கள்;

அடையாறு மண்டலம், திருவள்ளுவர் நகர், 7வது குறுக்குத் தெருவில் 1.47 கோடி ரூபாய் செலவில் கபடி மைதானம் மற்றும் இறகுப்பந்து மைதானத்துடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம், பெண்கள் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் கிரிக்கெட் வீசுகளம், மாதவரம் மண்டலம், புத்தகரம், பரப்பன்குளத்தில் 1.40 கோடி ரூபாய் செலவில் புதிய பூங்கா;

என மொத்தம் 30.60 கோடி ரூபாய் முடிவுற்ற 11 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப்பணிகளின் விவரங்கள்

பெருங்குடி மண்டலம், கொட்டிவாக்கம், பக்கிங்ஹாம் கால்வாய் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகரில் புதிய பாலம், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம்சாலையை இணைக்கும் வகையில் காமராஜர் சாலை, வீரமணி சாலை, பாலவாக்கம் பகுதியில் புதிய பாலம், சோழிங்கநல்லூர் மண்டலம், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் பாண்டியன் தெரு, அண்ணா நகர், துரைப்பாக்கம் பகுதியில் புதிய பாலம், என 21.03 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பாலங்கள்;

இராயபுரம் மண்டலம், ஆதித்தனார் சாலை, புதுப்பேட்டை டி-டிப்போவில் 5.40 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அலுவலகக் கட்டடம்; திருவொற்றியூர் மண்டலம், பட்டினத்தார் சாலையில் 9.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகக் கட்டடம்; கோடம்பாக்கம் மண்டலம், ஜாபர்கான்பேட்டை, பிள்ளையார் கோயில் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை மண்டலம், கண்ணன் தெரு - புத்தா தெரு சென்னை நடுநிலைப்பள்ளி, பெருங்குடி மண்டலம், குப்பம் பிரதான சாலை சென்னை தொடக்கப்பள்ளி கட்டடங்கள் கட்டும் பணி 13.89 கோடி மதிப்பீட்டிலும் மாதவரம் மண்டலம், தட்டாங்குளத்தில் 9.50 கோடி மதிப்பீட்டில் மண்டல அலுவலகக் கட்டடம் கட்டும் பணி;

என மொத்தம் 59.60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தொடங்கி வைக்கப்பட்ட வாகனங்களின் விவரங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் 6 நீர் தெளிக்கும் வாகனங்கள்; பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றி சீர்செய்யும் வகையில், 6 ஹைட்ராலிக் இயந்திரங்கள், அலுவலர்கள் களப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் 16 ஆய்வு வாகனங்கள், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 4 இயந்திரப் பெருக்கி வாகனங்கள், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் வகையில் 4 கல்விச் சுற்றுலா பேருந்துகள், டீசல் மூலம் இயங்கும் 12 சிறிய அளவிலான இயந்திரப் பெருக்கி வாகனங்கள், பேட்டரி மூலம் இயங்கும் 2 சிறியரக இயந்திரப் பெருக்கி வாகனங்கள்;

என மொத்தம் 19.44 கோடி ரூபாய் மதிப்பிலான 50 புதிய வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் திறந்து வைக்கப்பட்ட பணிகளின் விவரங்கள்

பள்ளிக்கரணை விரிவான பாதாள சாக்கடை திட்டம் - மயிலை பாலாஜி நகர், காமகோடி நகர் மற்றும் வள்ளல் பாரி நகர்; முகலிவாக்கம் விரிவான பாதாள சாக்கடை திட்டம் - மணப்பாக்கம் முகலிவாக்கம் பிரதான சாலை கழிவுநீரேற்று நிலையத்தின் பகுதி வெள்ளோட்டம்;

மடிப்பாக்கம் பகுதிக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டம் - அண்ணா நகர், ராம் நகர் தெற்கு விரிவாக்க பகுதி மற்றும் தந்தை பெரியார் நகர்;

என மொத்தம் 188 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 முடிவுற்ற விரிவான பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட பணிகளின் விவரங்கள்

கடலூர் மாநகராட்சியில் 4.98 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட வெள்ளி கடற்கரை, திருப்பாப்புலியூர் சரவணா நகர் பகுதியில் 2.50 கோடி ரூபாய் செலவில் மண்டல அலுவலகக் கட்டடம், முதுநகர் பகுதியில் 2.50 கோடி ரூபாய் செலவில் மண்டல அலுவலகக் கட்டடம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் 4.60 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு சந்தை, ஓசூர் மாநகராட்சி, எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் 5.88 கோடி ரூபாய் செலவில் புதிய நவீன வணிக வளாகம் மற்றும் 3.98 கோடி ரூபாய் செலவில் புதிய மீன் மார்க்கெட்;

கும்பகோணம் மாநகராட்சி, காந்தியடிகள் சாலையில் 2.62 கோடி ரூபாய் செலவில் அறிவுசார் மையம், புதுக்கோட்டை மாநகராட்சியில் 6.42 கோடி ரூபாய் செலவில் தினசரி அங்காடி, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சேலம் வடக்கு பகுதியில் 10 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து அழகுப்படுத்தப்பட்ட அல்லிக்குட்டை ஏரி, திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு பகுதியில் சங்கிலிப் பள்ளம் ஒடையின் மேல் 1.50 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம்;

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 2.19 கோடி ரூபாய் செலவில் அறிவுசார் மையம், விழுப்புரம் நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் தெரு நாயக்கன் தோப்பு என்ற இடத்தில் 1.36 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம், வாணியம்பாடி நகராட்சியில் 4.39 கோடி ரூபாய் செலவில் வாரச்சந்தை பகுதியில் மார்கெட், ஒட்டன்சத்திரம் நகராட்சி, காந்தி மார்கெட்டில் 21.25 கோடி ரூபாய் செலவில் கடைகள், குழந்தை வேலப்பர் கோயில் மலைப் பாதையில் 18.64 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கிரிவலப்பாதை;

உடுமலைப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பொள்ளாச்சி - பழனி சாலையில் 3.75 கோடி ரூபாய் செலவில் கூடுதல் பேருந்து நிலையம், இராஜபாளையம் நகராட்சி, பழைய பேருந்து நிலையத்தை இடித்து 2.90 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம், தென்காசி நகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வரும் உள்நோயாளிகள் உதவிக்கு வரும் நபர்கள் தங்கும் வகையில் 1.25 கோடி ரூபாய் செலவில் சிறப்பு வசிப்பிட கட்டடம், சுரண்டை நகராட்சி, வார்டு எண்-2-இல் 1.88 கோடி ரூபாய் செலவில் கல்யாண மண்டபம்;

என மொத்தம் 102 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவில் 19 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்

நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் கீழ் வேலூர் மாவட்டம், சோளிங்கர் நகராட்சி எல்லைக்குட்பட்ட திருத்தணி சாலை இடுகாட்டிற்கு செல்லும் வழியில் 10.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக சாய்வுதள பாலம் அமைக்கும் பணி; வேலூர் மாவட்டம், சோளிங்கர் நகராட்சி பேருந்து நிலையத்தை 4.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்குதல் பணி;

என மொத்தம் 15 கோடியே 11 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

பேரூராட்சிகள் சார்பில் திறந்து வைக்கப்பட்ட பணிகளின் விவரங்கள்

பேரூராட்சிகள் ஆணையரகத்தின் கீழ் வேலூர் மாவட்டம் – பள்ளிக்கொண்டா, கோயம்புத்தூர் மாவட்டம் – மோப்பிரிபாளையம், சிறுமுகை ஆகிய இடங்களில் 6.12 கோடி ரூபாய் செலவில் 3 வாரச்சந்தைகள், வேலூர் மாவட்டம் – பள்ளிக்கொண்டா மற்றும் ஒடுக்கத்தூர் ஆகிய இடங்களில் 56.20 கோடி ரூபாய் செலவில் 2 குடிநீர் மேம்பாட்டு பணிகள், இராணிப்பேட்டை மாவட்டம் – விளாப்பாக்கம், கோயம்புத்தூர் மாவட்டம் – ஆணைமலை ஆகிய இடங்களில் 3.05 கோடி ரூபாய் செலவில் வகுப்பறைகள், திருவண்ணாமலை மாவட்டம் – தேசூர், தென்காசி மாவட்டம் – வடகரை கீழ்பிடாகை, திண்டுக்கல் மாவட்டம் – கீரனூர் ஆகிய இடங்களில் 3.43 கோடி ரூபாய் செலவில் 3 பேரூராட்சி அலுவலகக் கட்டடங்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் – ஊத்தங்கரையில் 1.46 கோடி ரூபாய் செலவில் அறிவுசார் மையம்;

கோயம்புத்தூர் மாவட்டம் – ஒத்தக்கால் மண்டபத்தில் 1.46 கோடி ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகனமேடை, நாமக்கல் மாவட்டம் – மோகனூரில் 2.80 கோடி ரூபாய் செலவில் சமுதாயக்கூடம், கன்னியாகுமரி மாவட்டம் – திருவட்டாறில் 2.55 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்ட பேருந்து நிலையம்;

என மொத்தம் 77.07 கோடி ரூபாய் செலவில் 14 முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

பேரூராட்சிகள் சார்பில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்

பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் கீழ் வேலூர் மாவட்டம் – பனப்பாக்கம் பேரூராட்சியில் 6.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP cum FSTP), ஒடுக்கத்தூர் முதல் நேமந்தபுரம் வரை 8.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம்,

இராணிப்பேட்டை மாவட்டம் – விளாப்பாக்கத்தில் 1.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை, தென்காசி மாவட்டம் – ஆழ்வார்குறிச்சி மற்றும் பண்பொழி ஆகிய இடங்களில் 2.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 பேரூராட்சி அலுவலகக் கட்டடங்கள்;

என மொத்தம் 18.38 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விவரங்கள்

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 20 ஊரக குடியிருப்புகளுக்கான 15.48 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 41 ஊரக குடியிருப்புகளுக்கான 45.10 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம்;

என மொத்தம் 60 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் 58,000 மக்கள் பயன்பெறும் வகையிலான 2 முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Also Read: மாதந்தோறும் 1,540 கிராமங்களில் உழவரைத் தேடித் திட்ட முகாம்கள்! : திராவிட மாடலின் புதிய முன்னெடுப்பு!