Tamilnadu
அரசு பள்ளிகளில் சேர்ந்த 1.8 லட்சம் மாணவர்கள்... 3 லட்சம் இலக்கை நோக்கி உழைக்கும் ஆசிரியர்கள் !
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, மாணவர் சேர்க்கை திருவிழாவாக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பெற்றோர்கள் பலர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். அந்தவகையில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் 3 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
காலை உணவு திட்டம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, உயர்வுக்குப்படி என தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை பெற்றோருக்கு எடுத்துரைத்து தொடர்ந்து விடுமுறை நாட்களிலும் மாணவர் சேர்க்கை ஆசிரியர்கள் துரிதப்படுத்தி வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தபின், 3 லட்சம் மாணவர்கள் என்ற இலக்கை கடந்து மாணவர் சேர்க்கை இருக்குமென அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!