Tamilnadu
”தமிழ்நாட்டு பிள்ளைகளின் கல்வியை அழிக்க பார்க்கும் ஒன்றிய அரசு” : டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு!
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்ததை அடுத்து,”நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு” என்ற தலைப்பில் சைதாப்பேட்டை மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அ.தி.மு.க-வின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு இருண்டு கிடந்தது. எல்லா துறையிலும் பின்தங்கி இருந்தது. பின்ன தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டை, திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக மீட்டு கல்வி, மருத்துவம் என எல்லா துறையிலும் தமிழ்நாட்டை முதன்மை படுத்தி இருக்கிறார்.
ஏன் ஒன்றிய பா.ஜ.க அரசே தமிழ்நாட்டை பாராட்டி மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் விருதுகளை வழங்கியுள்ளது என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், தமிழ்நாட்டை திராவிட மாடல் அரசு எந்த அளவிற்கு உயர்த்தி இருக்கிறது என்று.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.67% பெற்று முதலிடத்தில் இருக்கிறது. முதலிடத்திற்கு தேவையான கட்டமைப்பை இந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார்.
முன்பெல்லாம் விற்பனை வரி, வருமான வரி என்று ஒன்று இருந்தது. வருமான வரியை ஒன்றிய அரசு பெற்றுக் கொள்ளும், விற்பனை வரியை GST என்ற பெயர் மாற்றி ஒன்றிய அரசு அதனை பெற்றுக் கொள்கிறது. வரியை நம்மிடம் பெற்றுக் கொண்டு நிதியை தர மறுக்கிறார்கள்.
டெல்லியில் ஒரு கூட்டம் இருந்து கொண்டு நம்மை பார்த்து இந்துக்களின் விரோதி என்று கூறுகிறது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்று ஒரு கழகம் இருக்கிறது என்றால் அது தி.மு.கதான். பிறப்பால் அனைவரும் சமம், யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்று தினமும் சொல்வது மட்டுமல்ல பல திட்டங்களின் மூலம் அதை செயல்படத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி தமிழ்நாட்டை உத்தர பிரதேசம், பீகார் போல் மாற்ற ஒன்றிய பா.ஜ.க அரசு திட்டமிடுகிறது. இவர்களது திட்டம் ஒருபோதும் இங்கு பலிக்காது. பா.ஜ.கவினரை இங்கே விட்டுவிட்டால் நமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!