Tamilnadu
திராவிட மாடல் ஆட்சியில் காவலர்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் - பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். மணியன் பேசியபோது அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு பதிலளித்தார்.
அதன் விவரம் :
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் இங்கே நீண்ட நேரம் பேசியிருக்கிறார்; பல்வேறு கேள்விகளைக் கேட்டிருக்கிறார்; பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார். அவற்றை விரைவாக முடித்துத்தர வேண்டுமென்றும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். நாளையதினம் நான் பதிலுரை ஆற்றுகிறபோது விரிவான விளக்கத்தை அளிக்க இருக்கிறேன். இருந்தாலும், ஒரே ஒரு பிரச்சினையை மட்டும் இப்போது எடுத்து வைக்க நான் விரும்புகிறேன்.
மாண்புமிகு உறுப்பினர் பேசுகிறபோது, காவலர் நலத் திட்டங்களைப் பற்றிப் பேசினார். அவையெல்லாம் என்னவாயிற்று என்று அவர் கேள்வியைக் கேட்டிருக்கிறார். தமிழ்நாடு காவல் துறையில் தி.மு.க. ஆட்சியில்தான் பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதில், முத்தாய்ப்பாக நான் சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெரிய பட்டியலைப் போட முடியும். இருந்தாலும், சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.
காவலர் சேம நல நிதியின்கீழ் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழங்கும் நிதியினை 4 இலட்சம் ரூபாயிலிருந்து 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம். இந்தத் திட்டத்தின்கீழ் இருக்கின்ற உறுப்பினர் உயிரிழந்தால், வழங்கப்படக்கூடிய நிதி 50 ஆயிரம் ரூபாய் என்றிருந்தது, 1 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
10 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 10 rank-க்கில் வருகின்ற காவலர்களுடைய பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி பரிசுத் தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முதல் rank-க்கு வழங்கப்பட்ட ரூ.6,500/- என்பது ரூ.13,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் rank-க்கு வழங்கப்பட்ட ரூ.4,000/- என்பது ரூ.9,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மூன்றாம் rank-க்கு வழங்கப்பட்ட ரூ.2,500/- என்பது, ரூ.5,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. நான்காவது முதல் பத்தாவது rank வரை இருக்கக்கூடியவர்களுக்கு ரூ.2,000/-லிருந்து ரூ.4,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதேபோல், 12 ஆம் வகுப்புத் தேர்வில், முதல் 10 rank-க்குள் வரக்கூடிய காவலர்களுடைய பிள்ளைகளுக்கு பரிசுத் தொகை உயர்த்தப்பட்டு, குறிப்பாக முதல் rank வருகிறவர்களுக்கு ரூ.7,500/-லிருந்து, தி.மு.க. ஆட்சியில் ரூ.15,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் rank-க்கு ரூ.6,500/-லிருந்து ரூ.11,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மூன்றாம் rank-க்கு ரூ.3,500/-லிருந்து ரூ.7,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. 4 முதல் 10 rank வரை இருக்கக்கூடியவர்களுக்கு ரூ.2,500/-லிருந்து ரூ.5,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதிக மதிப்பெண் பெறக்கூடிய 100 மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு உயர் கல்வி வழங்கக்கூடிய திட்டம், 200 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், அவர்களுக்கு 25,000 ரூபாய் என்றிருந்த உயர் கல்வித் தொகை 30,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. காவலரோ அல்லது அவர்களது வாரிசோ பணியிலிருக்கும்போது கொல்லப்பட்டால் வழங்கப்படுகின்ற கருணை நிதி 15 இலட்சம் ரூபாயிலிருந்து 20 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
Police insurance திட்டப்படி பணியில் இருக்கக்கூடிய காவலர் உயிரிழந்தால் வழங்கப்படுகிற 2 இலட்சம் ரூபாய் உதவித் தொகை 4 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மருத்துவப் பரிசோதனைத் திட்டம் காவலருடைய மனைவிக்கும், பெண் போலீசாருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. போலீஸ் உணவு சலுகைகள் ஊர்க் காவல் படையினருக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
காவலர் முதல் ஆய்வாளர் வரை 2,249 பேருக்கு சிறைத் தண்டனைகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கருணை அடிப்படையில் 2,592 பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. காவலர் முதல் ஆய்வாளர் வரை இடர்படி- risk allowance 800 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. D.S.P. மற்றும் கூடுதல் D.S.P.-க்களுக்கு 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தலைமைக் காவலர் வரை இருக்கின்றவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு 15 நாட்களுக்கு ஒரு நாள் leave வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சிறப்பு போலீஸ்-Tamil Nadu Special Police Battalion-ல் பணிபுரியக்கூடிய அனைத்து காவலர்களுக்கும் weekly off விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை bus pass, Smart ID card 29 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி காவலர்களுக்கு அறிவிக்கப்பட்ட நலத் திட்டங்களையெல்லாம் இன்னும் நான் பட்டியலிட முடியும். இந்த ஆட்சியில் அனைத்து தரப்பினரையும் பேணிக் காப்பதைப்போலவே மக்களின் பாதுகாப்பில் இரவு, பகலாக பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய, அயராது உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய காவலர்களின் நலனையும் பேணி பாதுகாத்து வருகிறோம் என்று மாண்புமிகு உறுப்பினருக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!