Tamilnadu
"விஸ்வகர்மா திட்டத்தை நிராகரித்து, கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கியது ஏன்?" - முதலமைச்சர் விளக்கம் !
விஸ்வகர்மா திட்டத்தை நிராகரித்து, கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கியது ஏன்? என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவின் விவரம் :
'இன்னார்க்கு இதுதான்' எனும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை நிராகரித்து, ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனும் நம் திராவிட மாடல் அரசு கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கியது ஏன்?
* பள்ளி முடித்துக் கல்லூரி செல்லும் 18 வயதிலேயே 'பரம்பரைத் தொழிலைச் செய்' என்பது விஸ்கர்மா திட்டம். முதிர்ச்சி பெற்ற 35 வயதை எட்டியோர்தான் விண்ணப்பிக்க முடியும் என்பது நம் திட்டம்.
* காலாகாலமாகக் குடும்பம் செய்துவந்த தொழிலுக்குத்தான் விஸ்வர்கமா திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். யாரும், விரும்பிய எந்தத் தொழிலையும் செய்யக் கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
* 18 திட்டங்களை உள்ளடக்கியது விஸ்வகர்மா, அதனை 25 திட்டங்களாக நாம் விரிவுபடுத்தியிருக்கிறோம்.
* விஸ்வகர்மா திட்டத்தில் கடன் மட்டுமே பெற இயலும், கலைஞர் கைவினைத் திட்டத்தில் மானியத்தோடு 3 லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெறலாம்.
மொத்தத்தில், குடும்பத் தொழிலை ஊக்குவித்து, நம் மாணவர்களின் உயர்கல்விக்குத் தடை ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமல்ல நம்முடையது; யாரையும் ஒதுக்காத அனைவருக்குமான சமூகநீதி நோக்கிலான திட்டம்!
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?