Tamilnadu
“சென்னையில் 30 புதிய பூங்காக்கள் அமைக்க, ரூ.60 கோடி ஒதுக்கீடு!” : அமைச்சர் கே.என்.நேரு தகவல்!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், இன்று (ஏப்ரல் 17) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடைபெற்ற கேள்வி - பதில் நேரத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, சென்னை மாநகராட்சியில் 204 புதிய பூங்காக்கள், ரூ.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.
307 பூங்காக்கள் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி, ரூ.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. மேலும், 2025-26 நிதியாண்டில் 30 புதிய பூங்காக்கள் அமைக்க, ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்க, இதுவரை ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டு, பெரும்பான்மையான பணிகள் நிறைவுற்றன. கூடுதலாக, பழைய மழைநீர் வடிகால்களை புதுப்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னை தொல்காப்பியப் பூங்கா, ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர்கள் மையம், சிற்றுண்டியகம், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்டவை, இப்பூங்காவில் இடம்பெறவுள்ளன” என தெரிவித்தார்.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !