Tamilnadu

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை : 210 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுது. இதில் அமைச்சர் சேகர்பாபு 210 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட சீர் வரிசைகள் வழங்கி கடந்த மூன்று ஆண்டுகளில் 1800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டும் 1000 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.70,000/- மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.

2. ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 18,000 திருக்கோயில்கள் பயனடைந்து வருகின்றன. இவ்வாண்டு 1000 நிதி வசதியற்ற திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.25 கோடி அரசு நிதியாக வழங்கப்படும்.

ஒரு கால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பூசை செய்யும் அர்ச்சர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மாத ஊக்கத்தொகை ரூ.1,000/- லிருந்து ரூ.1,500/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

3. தமிழர் திருநாளாம் தைத் திருநாளில் ஒரு கால பூசைத் திட்டத்தில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படும்.

4. ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள 18,000 திருக்கோயில்களுடன் இவ்வாண்டு விரிவுபடுத்தப்படும் 1000 திருக்கோயில்களை சேர்த்து மொத்தம் 19,000/- திருக்கோயில்களுக்கு பூசைகள் செய்திட உதவியாக ரூ.15 கோடி செலவில் பித்தளை தாம்பாளம், தூபக்கால், மணி, விளக்கு உள்ளிட்ட பூசை உபகரணங்கள் வழங்கப்படும்.

5. ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ள கிராமக்கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடர் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் 10,000 நபர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000/- மானியமாக வழங்கப்படும். இதற்கான செலவினம் ரூ.12 கோடி அரசு நிதி உதவி வழங்கப்படும்.

6. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் மாத பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருநாள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருநாள், திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகிய முக்கிய திருவிழா நாட்களில் கட்டணத் தரிசனம் முற்றிலும் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கீழ்க்கண்ட முதுநிலைத் திருக்கோயில்களிலும் திருவிழா நாட்களில் கட்டணத் தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும்.

7. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் உள்ள ஓதுவார் காலிப் பணியிடங்களில் திருக்கோயில்கள் சார்பில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்று சான்றிதழ் பெற்ற ஓதுவார்களுக்கும், பெண் ஓதுவார்களுக்கும் பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

8. சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட திருக்கோயில்களில் தினசரி காய்ச்சிய பால் வழங்கப்படும். இத்திட்டம்

10 திருக்கோயில்களில் ஆண்டுக்கு ரூ.50 இலட்சம் செலவினத்தில் செயல்படுத்தப்படும்.

9. பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 13 திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு முதல் (i) பிள்ளையார்பட்டி, அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில் (ii)கொடைக்கானல், அருள்மிகு குறிஞ்சியாண்டவர் திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

10. திருவிழா மற்றும் சிறப்பு தினங்களில் கீழ்க்கண்ட 2 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.

i).சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமைகள் மற்றும் விழா நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.

ii).இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் திருவிழா மற்றும் சிறப்பு நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.

11. பக்தர்களுக்கு ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 764 திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு 6 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

12. நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறும் 13 திருக்கோயில்கள் மற்றும் இவ்வாண்டு நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள 2 திருக்கோயில்களிலும், வழக்கமாக வழங்கும் அன்னதான உணவுடன் வடை மற்றும் பாயசம் சேர்த்து வழங்கப்படும்.

13. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் தற்போது அன்னதானத் திட்டத்தின் கீழ் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதை 200 பக்தர்களுக்கு விரிவுபடுத்தி வழங்கப்படும்.

14. ஈரோடு மாவட்டம், வட்டம் மற்றும் நகர், திண்டல், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் அன்னதானத் திட்டத்தில் தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் அதிக அளவில் வருவதை கருத்திற் கொண்டு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள், அமாவாசை நாட்கள், மாத சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களில் 200 பக்தர்களுக்கும், கந்த சஷ்டித் திருவிழா நடைபெறும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 பக்தர்களுக்கும் விரிவுபடுத்தி அன்னதானம் வழங்கப்படும்.

15. தஞ்சாவூர் மாவட்டம். கும்பகோணம் வட்டம், ஒப்பிலியப்பன்கோயில், அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வார சனிக்கிழமை தோறும் 200 பக்தர்களுக்கும், ஆங்கிலப் புத்தாண்டு, பங்குனி மாதம் நடைபெறும் திருத்தேரோட்டம் மற்றும் புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் 2000 பக்தர்களுக்கும் விரிவுபடுத்தி அன்னதானம் வழங்கப்படும்.

16. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், சூலக்கல், அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோயிலில் நாள்தோறும் 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதை திருவிழா மற்றும் சிறப்பு நாட்களில் 100 பக்தர்களுக்கு விரிவுபடுத்தி வழங்கப்படும்.

17. திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் செவ்வாய்கிழமைதோறும் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதை 2000 பக்தர்களுக்கும், ஞாயிறுதோறும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதை 500 பக்தர்களுக்கும் வடை, பாயாசத்துடன் விரிவுபடுத்தப்படும்.

18. தூத்துக்குடி மாவட்டம், சங்கரன்கோயில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் தற்போது அன்னதானத் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதை 150 பக்தர்களுக்கு விரிவுபடுத்தி வழங்கப்படும்.

19. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருள்மிகு வடாரேண்யேசுவரர் திருக்கோயிலில் தற்போது அன்னதானத் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் அதிகம் வருகை புரியும் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் 500 பக்தர்களுக்கு விரிவுபடுத்தி வழங்கப்படும்.

20. திருச்சி மாவட்டம். திருவானைக்காவல் அருள்மிகு ஜெம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் தற்போது அன்னதானத் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதை 200 பக்தர்களுக்கு விரிவுபடுத்தி வழங்கப்படும்.

21. சென்னை, வடபழநி அருள்மிகு வடபழநியாண்டவர் திருக்கோயிலில் அன்னதானத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் நாள்தோறும் 150 நபர்களுக்கும், செவ்வாய்கிழமையில் 200 நபர்களுக்கும், கிருத்திகை நாட்களில் 750 பக்தர்களுக்கும் விரிவுபடுத்தி வழங்கப்படும்.

22. வேலூர் மாவட்டம், பள்ளூர் அருள்மிகு வாராகி அம்மன் திருக்கோயிலுக்கு பஞ்சமி தினத்தன்று வருகை தரும் 200 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

23. சென்னை, வடபழநி அருள்மிகு வடபழநியாண்டவர் திருக்கோயில் உருவாக காரணமாக இருந்த சித்தர்கள் ஸ்ரீ அண்ணாசாமி நாயக்கர், ஸ்ரீ ரத்னசாமி செட்டியார் ஸ்ரீ பாக்யலிங்க தம்பிரான் சித்தர் கோயிலில் அவர்களின் குருபூஜை தினத்தன்று 1,000 பக்தர்களுக்கும், ஒவ்வொரு பௌர்ணமி நாட்களில் 200 பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

24. திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் தற்போது 25 திருக்கோயில்களில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இவ்வாண்டு மேலும் 5 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

25. ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கீழ்க்கண்ட திருக்கோயில்களில் கூழ் வார்க்கப்படும்.

26. மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் 20 பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மேலும் 5 அம்மன் திருக்கோயில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

27. ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மங்கலப் பொருட்கள் ஒரு திருக்கோயிலுக்கு 20,000 வீதம் கீழ்க்கண்ட ஐந்து திருக்கோயில்களில் ஒரு இலட்சம் பெண் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

28. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்.

29. 9 திருக்கோயில்களின் சார்பாக மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினை பெற்றதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு கூடுதலாக, 3 திருக்கோயில்கள் சார்பில் மகாசிவராத்திரி விழா நடத்தப்படும்.

30. பதிணென் சித்தர்களில் கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர் ஆகிய மூவருக்கும் திருக்கோயில்களின் சார்பில் விழா எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக

i).சிவவாக்கிய சித்தருக்கு புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர், அருள்மிகு உருமநாதர் திருக்கோயில் சார்பாகவும்,

ii).பதஞ்சலி சித்தருக்கு இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் சார்பாகவும், சித்தர் விழா நடத்தப்படும்.

31. திருக்கோயில்களில் காணிக்கையாக பெறப்படும் உபரி பருத்தி புடவை மற்றும் வேட்டிகளை ஒருகாலபூசைத் திட்ட திருக்கோயில்கள், கிராமக்கோயில்கள், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள திருக்கோயில்கள் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு இறைவன், இறைவி திருவுருவங்களுக்கு சாற்றுப்படி செய்வதற்கு தேவையின் அடிப்படையில் ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் தைப்பொங்கல் திருநாளுக்கு முன்பாக வழங்கப்படும்.

32. பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் மூலவர் அம்மன் திருமேனிகளுக்கு தங்கக் கவசங்கள் ரூ.8 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும்.

33. வேலூர் மாவட்டம், வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலுக்கு புதிய வெள்ளித்தேர் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும்.

34. கும்பகோணம், அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயிலில், பழுதடைந்துள்ள வெள்ளித்தேர் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

35. பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், மலைக்கோயிலில் உற்சவர் சன்னதியின் உட்புற சுவர்களில் நகாசு வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளித்தகடு பதிக்கும் பணி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்

36. பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் மலைக்கோயிலை எளிதில் சென்றடைய கட்டணமின்றி இழுவை இரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

37. திருக்கோயில்களுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் மலைக்கோயிலை எளிதில் சென்றடைய கட்டணமின்றி கம்பிவடஊர்தியில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

38. திருக்கோயில்களுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் மலைக்கோயிலை எளிதில் சென்றடைய கட்டணமின்றி கீழ்க்கண்ட திருக்கோயில்களுக்கு சொந்தமான பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

39. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு வருகை புரியும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் கட்டணமில்லாமல், தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

40. வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு 48 முதுநிலைத் திருக்கோயில்களில் இறை தரிசனத்திற்கு உதவிட 24 மணி நேரமும் செயல்படுகின்ற உதவி மையம் ஆணையர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்படும்.

41. திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அருகாமையில் உள்ள திருக்கோயில்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி 10 திருக்கோயில்களில் அமைக்கப்படும்.

42. திருக்கோயில்களில் அமையப்பெற்றுள்ள நந்தவனங்களில் 27 நட்சத்திரங்களுக்கு உரித்தான மரக்கன்றுகள் கீழ்க்கண்ட 10 திருக்கோயில்களில் நடப்படும்.

43. திருக்கோயில்களுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத நிலங்களில், 20 இணை ஆணையர் மண்டலத்திற்கு தலா 1 இலட்சம் வீதம் சமூக ஆர்வலர்கள் மற்றும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி வழங்கும் நிறுவனங்கள் மூலம் பனை, இலுப்பை உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

44. ஆன்மிகப் பயணமாக இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிருந்து காசி அருள்மிகு விசுவநாதசுவாமி திருக்கோயிலுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 920 பக்தர்கள் அரசு நிதி ரூ.2.30 கோடி செலவில் அழைத்துச் செல்லப்பட்டனர். பெருவாரியான பக்தர்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவிப்பதால், இவ்வாண்டு 600 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினம் ரூ.1.50 கோடி அரசு நிதியாக வழங்கப்படும்.

45. தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அரசு நிதியில் அழைத்து செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு இதுவரை 2,000 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது பக்தர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு 2,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.2.50 கோடி அரசு நிதியாக வழங்கப்படும்.

46. ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 2,000 பக்தர்கள் அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 இலட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்.

47. புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு அரசு நிதியில் 2,000 பக்தர்கள் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 இலட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்.

48. திருக்கயிலாய மானசரோவர் ஆன்மிகப் பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.50,000/-லிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும், இதற்கான நிதி ரூ.5 கோடி அரசால் வழங்கப்படும்.

49. முக்திநாத் புனிதத் தலத்திற்கு ஆன்மிகப் பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு மானியம் ரூ.20,000/-லிருந்து ரூ.30,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்கான நிதி ரூ.1.50 கோடி அரசால் வழங்கப்படும்.

50. இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு பழமையான திருக்கோயில்களை புனரமைத்தல், பாதுகாத்தல் குறித்தும், கருங்கல் மற்றும் உலோகத் திருமேனிகள், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள், செப்பேடுகள் மற்றும் புராதன கலைப் பொருட்கள் பாதுகாத்தல் குறித்தும் மாநிலத் தொல்லியல் துறை மூலம் ஆண்டுக்கு 4 முறை பயிற்சி வழங்கப்படும்.

51. திருக்கோயில்களில் இறைவன் மற்றும் இறைவியருக்கு இறையமுது தயாரிக்கும் பணியாளர்களுக்கும், அன்னதான சமையல் பணியாளர்கள் மற்றும் திருக்கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் தயாரிக்கும் பணியாளர்களுக்கும் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தேர்ந்த முதுநிலை மடப்பள்ளி பரிச்சாரகர்கள் மூலம் ஆண்டுக்கு 4 முறை திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

52. கிராமக்கோயில் பூசாரிகளுக்கு பூசை முறைகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒரு வார காலம் அளிக்கப்படும்.

53. அதிக அளவில் பக்தர்கள் வருகை புரியும் 19 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த ஆண்டு கூடுதலாக

i).கோவை மாவட்டம், பேரூர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்

ii).திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.

54. துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ரூ.1000/– வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலன் கருதி தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1000/– பொங்கல் கருணைக் கொடை ரூ.2000/– ஆக உயர்த்தி வழங்கப்படும்.

துறை நிலையிலான குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ரூ.1000/– வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1000/– பொங்கல் கருணைக் கொடை ரூ.2000/– ஆக உயர்த்தி வழங்கப்படும்.

55. திருக்கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, பணியாளர் சேமநலநிதி நிறுவனம் (EPF) மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முதல்முறையாக பொங்கல் கருணைக்கொடை ரூ.2000/– வழங்கப்படும்.

திருக்கோயிலில் பணிபுரிந்து ஓய்வுபெற்று, பணியாளர் சேமநலநிதி நிறுவனம் (EPF) மூலம் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முதல்முறையாக பொங்கல் கருணைக்கொடை ரூ.2000/– வழங்கப்படும்.

56. பணிக்காலத்தில் இயற்கை எய்திய திருக்கோயில் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.3 இலட்சம் குடும்பநல நிதியானது ரூ.4 இலட்சமாக உயர்வு செய்யப்படும்.

57. திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, துறைநிலை ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு தற்போது ரூ.4,000/– ஒய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.4,000/– லிருந்து ரூ.5,000/–ஆக உயர்வு செய்யப்படும்.

துறை நிலை குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தற்போது ரூ.2,000/– ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.2,000/–லிருந்து ரூ.2,500/– ஆக உயர்வு செய்யப்படும்.

58. திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, EPF ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்கள் தற்போது ரூ.900/– முதல் ரூ.2,190/- வரை மட்டுமே ஒய்வூதியமாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு இணையாக கருணைத்தொகை ( EX – gratia) வழங்கப்படும். இத்தொகை ஆணையர் அலுவலகத்தில் பேணப்படும் மையநிதி வட்டித் தொகையிலிருந்து வழங்கப்படும். மேலும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் கருணைத் தொகை வழங்கப்படும்.

59. திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓதுவார், வேதபாராயணர், திவ்யபிரபந்தம் பாடுவோர், அரையர், அர்ச்சகர், மற்றும் இசைக் கலைஞர்களுக்கு அரசு நிதி மூலம் மாதந்தோறும் ரூ.3,000/– ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,000/–லிருந்து ரூ.4,000/–ஆக உயர்த்தி வழங்கப்படும். இதற்கு தேவையான அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

60. திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இருசக்கர வாகனக் கடன் ரூ.20,000/-லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும். இக்கடன் தொகையில் ரூ.5,000/- மட்டும் அந்தந்த திருக்கோயில் நிதியிலிருந்து மானியமாக வழங்கப்படும்.

61. திருக்கோயில் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால் இறுதிச் சடங்கு செய்வதற்கு குடும்ப நலநிதியிலிருந்து வழங்கப்படும் முன்பணம் ரூ.2,000/-லிருந்து ரூ.10,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

62. துறைக் கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக் கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தகுதி வாய்ந்த கிராமக்கோயில் பூசாரிகளின் எண்ணிக்கை 4,000 லிருந்து 5,000 ஆக உயர்த்தப்படும்.

63. பூசாரிகள் நலவாரியத்தில், உறுப்பினராக பதிவு செய்திட ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000 லிருந்து ரூ.1 இலட்சமாக உயர்த்தப்படும். தற்பொழுது உள்ள நலவாரிய உறுப்பினர்களுடன் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டு சிறப்பு முகாம் நடத்தி பதிவு சேர்க்கை நிறைவடைந்தவுடன், ஒரு கால பூசைத் திட்ட திருக்கோயில் அர்ச்சர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு நிகரான ஊக்கத்தொகை பூசாரி நலவாரிய உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.

64. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடத்தப்படும் பதிப்பகப்பிரிவின் மூலம் இதுவரை 516 அரிய ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாண்டும் ஆன்மிக நூல்கள், சமய நூல்கள், கையடக்கச் சிற்றேடுகள், இறைத்துதிப் பாடல்கள், பாராயணப் புத்தகங்கள், வழிகாட்டிக் கையேடுகள் உட்பட 300 அரிய நூல்கள் வெளியிடப்படும்.

65. ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் நலன் கருதி, இவ்வாண்டு 600 மாணவர்களின் மேற்படிப்பிற்காக ஆண்டொன்றுக்கு தலா ரூ.10,000/- கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

66. வடபழநி, அருள்மிகு வடபழநியாண்டவர் திருக்கோயிலில் ஓதுவார் பயிற்சி நிலையம் பகுதி நேர வகுப்பாக நடத்தப்படும்.

67. மதுரை மாவட்டம், சோலைமலை மண்டபம், அருள்மிகு முருகன் திருக்கோயில் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களின் சார்பாக தவில் மற்றும் நாதசுவர பயிற்சிப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படும்.

68. அனைத்து பயிற்சிப் பள்ளிகளில் முழுநேர வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகையாக 2022 ஆம் ஆண்டு வரை ரூ.1,000/- வழங்கப்பட்டு வந்தது. 2023 ஆம் ஆண்டு முதல் ரூ.3,000/-ஆகவும், 2024 ஆண்டு முதல் ரூ.4,000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் ரூ.10,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அனைத்து பயிற்சிப் பள்ளிகளில் பகுதி நேர வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகையாக 2023 ஆம் ஆண்டு முதல் ரூ.1,500/- ஆக வழங்கப்பட்டு வந்ததை, 2024 ஆம் ஆண்டு முதல் ரூ.2,000/-ஆக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

69. பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

70. பழனி, சின்னக்கலையம்புத்தூர், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் குறிஞ்சி விடுதி புதுப்பித்தல் (மராமத்து) பணி, மாணவியர் விடுதியைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டுதல் மற்றும் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

71. பழனி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் பழைய விடுதி கட்டடத்தை இடித்து புதிய விடுதி ரூ.5 கோடியில் கட்டப்படும்.

72. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் ரூ.2.44 கோடியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

73. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சார்பாக நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் 22,920 மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

74. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சார்பாக நடத்தப்படும் 14 பள்ளிகள் மற்றும் 10 கல்லூரிகளில் பயின்று வரும் 16,801 மாணாக்கர்களுக்கு கல்வி உபகரணங்களான புத்தகப்பை, நோட்டு, பேனா, பென்சில், டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் ஆகியன ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

75. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வெட்டியல் 6 மாத கால சான்றிதழ் படிப்பு தொடங்கப்படும்.

76. திருக்கோயில்கள் சார்பாக 19 திருக்கோயில்களில் மருத்துவ முதலுதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு சில மையங்களில் ஒரு செவிலியரும் மற்ற மையங்களில் 2 செவிலியர்கள் மட்டும் பணியில் உள்ளனர். திருக்கோயில்களில் திருவிழா மற்றும் கூட்ட நெரிசல் உள்ள காலங்களில் மருத்துவ முதலுதவி தேவைப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் தேவையை, தற்போது குறைந்த எண்ணிக்கையில் பணியிலுள்ள செவிலியர்களால் முழுமையாக பூர்த்தி செய்ய இயலவில்லை. வருங்காலங்களில் தேவையின் அடிப்படையில், மேலும் பல திருக்கோயில்களில் புதிய மருத்துவ முதலுதவி மையங்கள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதால், செவிலியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் திருக்கோயில்களின் அறங்காவலர் குழுவின் கோரிக்கையின்படி

I. திருச்சி, சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சார்பாக இத்திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக ஒரு செவிலியர் கல்லூரியும்,

II. காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் சார்பாக சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இத்திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக ஒரு செவிலியர் கல்லூரியும் அமைக்கப்படும்.

77. திருக்கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள அதிக அளவில் ஸ்தபதிகள் தேவையை கருத்திற்கொண்டு திருச்சி, திருவரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சார்பாக இத்திருக்கோயிலின் உபகோயிலான திருவெள்ளரை, அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருக்கோயில் நிர்வாகத்தின் கோரிக்கையின்படி புதிதாக, கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி அமைக்கப்படும்.

78. இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் ஆயிரக்கணக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை கண்காணித்திடவும், திருக்கோயில்களுக்கு சொந்தமான கட்டிடங்களை தொடர்ந்து பராமரித்திடவும், தகுதி வாய்ந்த பொறியாளர்களை உருவாக்கும் வண்ணம், கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக இத்திருக்கோயிலின் உபகோயிலான பேரூர் வட்டம், வடவள்ளி, அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருக்கோயில் அறங்காவலர் குழுவின் கோரிக்கையின்படி புதிதாக ஒரு பல்தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக் கல்லூரி) அமைக்கப்படும். இக்கல்லூரியில் இந்து சமயம் சார்ந்த பாடங்கள், சிற்பக்கலை மற்றும் கோயில் கட்டடக்கலை தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படும்.

79. பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் சார்பாக இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் விடுதி மாணவ மாணவியருக்கு அனைத்து நாட்களிலும் மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கப்படும்.

80. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் சார்பாக நடத்தப்பட்டு வரும் ஸ்ரீ காந்திமதியம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் 100 மாணவியருக்கு கட்டணமில்லாமல் உறைவிடம் மற்றும் உணவு வழங்கப்படும்.

81. கன்னியாகுமரி மாவட்டம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.13 கோடியிலிருந்து ரூ.18 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

82. புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 225 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.8 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

83. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்காக தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

84. திருக்கோயில் திருப்பணிகளுக்காக தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

85. கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் அடிப்படை வசதிகளுடன் அறுங்கோண வடிவத்தில் அமைக்கப்படும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதியதாக 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்.

86. ஈரோடு மாவட்டம், திண்டல், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதியதாக 180 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்.

87. இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், குமரகிரி, திமிரி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் புதியதாக 114 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்.

88. திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடற்கரை பரப்பினை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் பொருட்டும், புனித நீராடும் பக்தர்களின் நலன் கருதியும், நீர்வளத்துறையின் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு மூலம், ரூ.15 கோடி அரசு நிதி மற்றும் ரூ.15 கோடி திருக்கோயில் நிதி ஆக மொத்தம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

89. திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நாள்தோறும் 10 இலட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரும் பணி ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

90. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், தேரிக்குடியிருப்பு, அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கருங்கல் முன்மண்டபத்துடன் கூடிய புதிய ஏழு நிலை இராஜகோபுரம் கட்டப்படும்.

91. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் மற்றும் நகர் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

92. செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் வட்டம், திருக்கச்சூர், அருள்மிகு மருந்தீசுவரர் மற்றும் தியாகராஜசுவாமி (தாழக்கோயில்) திருக்கோயிலில் புதிய ஏழு நிலை இராஜகோபுரம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

93. தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தென்கரை, அருள்மிகு கௌமாரி அம்மன் திருக்கோயிலில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

94. தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

95. செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் வட்டம், திருக்கச்சூர், அருள்மிகு மருந்தீசுவரர் மற்றும் தியாகராஜசுவாமி (மலைக்கோயில் மேற்குபுறம்) திருக்கோயிலில் புதிய ஐந்து நிலை இராஜகோபுரம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

96. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கண்டரமாணிக்கம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் புதிய மூன்று நிலை இராஜகோபுரம் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

97. செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் வட்டம், திருக்கச்சூர், அருள்மிகு மருந்தீசுவரர் மற்றும் தியாகராஜசுவாமி (மலைக்கோயில் தெற்குபுறம்) திருக்கோயிலில் புதிய மூன்று நிலை இராஜகோபுரம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

98. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், மாம்பாக்கம், அருள்மிகு முருகநாதீசுவரர் திருக்கோயிலில் புதிய மூன்று நிலை இராஜகோபுரம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

99. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அய்யம்பேட்டை, அருள்மிகு செட்டியப்பர் எனும் சுந்தரேசுவரர் திருக்கோயிலில் புதிய மூன்று நிலை இராஜகோபுரம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

100. 4 திருக்கோயில்களில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக மூன்று நிலை இராஜகோபுரங்கள் கட்டப்படும்.

101. சென்னை இணை ஆணையர் மண்டலம் 1-இல் அமைந்துள்ள 50 திருக்கோயில்களுக்கு ரூ.12 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

102. சென்னை இணை ஆணையர் மண்டலம் 2-இல் அமைந்துள்ள 50 திருக்கோயில்களுக்கு ரூ.12 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

103. காஞ்சிபுரம் இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 101 திருக்கோயில்களுக்கு ரூ.14 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

104. வேலூர் இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 92 திருக்கோயில்களுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

105. விழுப்புரம் இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 101 திருக்கோயில்களுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

106. திருவண்ணாமலை இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 100 திருக்கோயில்களுக்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

107. சேலம் இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 114 திருக்கோயில்களுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

108. ஈரோடு இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 108 திருக்கோயில்களுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

109. திருப்பூர் இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 96 திருக்கோயில்களுக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

110. திண்டுக்கல் இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 129 திருக்கோயில்களுக்கு ரூ.14 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

111. கோவை இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 110 திருக்கோயில்களுக்கு ரூ.11 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

112. திருச்சி இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 100 திருக்கோயில்களுக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

113. கடலூர் இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 80 திருக்கோயில்களுக்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

114. மயிலாடுதுறை இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 100 திருக்கோயில்களுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

115. தஞ்சாவூர் இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 88 திருக்கோயில்களுக்கு ரூ.16 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

116. நாகப்பட்டினம் இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 116 திருக்கோயில்களுக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

117. மதுரை இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 71 திருக்கோயில்களுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

118. சிவகங்கை இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 80 திருக்கோயில்களுக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

119. தூத்துக்குடி இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 108 திருக்கோயில்களுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

120. திருநெல்வேலி இணை ஆணையர் மண்டலத்தில் அமைந்துள்ள 50 திருக்கோயில்களுக்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

121. சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களில் 50 திருக்கோயில்களுக்கு ரூ. 8 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

122. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், செட்டியாபத்து, அருள்மிகு சுவாமி சிதம்பரேசுவரர் திருக்கோயிலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

123. கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

124. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், செட்டியாபத்து, அருள்மிகு சுவாமி சிதம்பரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு ஐந்து வீட்டுசுவாமி திருக்கோயிலில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

125. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

126. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வேலுடையான்பட்டு அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

127. தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் நகர், தெற்கு ராஜ வீதி, அருள்மிகு சதுர்புஜ வரதராஜர் திருக்கோயிலில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

128. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு தேவிகருமாரியம்மமன் திருக்கோயிலில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

129. சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

130. கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், குமாரை, அருள்மிகு பூமாலையப்பர் மற்றும் பச்சையம்மன் திருக்கோயிலில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

131. சென்னை, பள்ளியப்பன்தெரு, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

132. கோவை மாவட்டம், சூலூர் வட்டம், சூலூர், அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

133. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், தீண்டாக்கல், அருள்மிகு வீரபாண்டீசுவரர் திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

134. நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டம் மற்றும் நகர், அருள்மிகு வீரபத்ரசுவாமி திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

135. கோயில் காடுகளில் அமைந்துள்ள 5 திருக்கோயில்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

136.கன்னியாகுமரி மாவட்டம், அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு ரூ.15 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

137. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வெட்டுவானம், அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு ரூ.10 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

138. ஈரோடு மாவட்டம், கொடுமுடி, அருள்மிகு மகுடேசுவரர் மற்றும் வீரநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு ரூ.7 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

139.ஈரோடு மாவட்டம், பவானி, அருள்மிகு சங்கமேசுவரர் திருக்கோயிலில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு ரூ.7 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

140. சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சாலை விரிவாக்கம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி ரூ.67 கோடி மதிப்பீட்டில் அரசு நிதியில் மேற்கொள்ளப்படும்.

141. திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாற்று மலைப்பாதை ரூ.57.50 கோடி மதிப்பீட்டில் அரசு நிதியில் மேற்கொள்ளப்படும்.

142.ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில் வளாகத்தில் கிழக்கு பக்கம் தார்சாலை அமைக்கப்படும்.

143 .ஈரோடு மாவட்டம், திண்டல், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் மலைக்கு செல்வதற்கு புதியதாக படிவழிப்பாதை அமைக்கப்படும்.

144. சோளிங்கர், சின்னமலை, அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு மலைப்பாதை அமைப்பது குறித்து சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

145. கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், மரப்பாலம் அருள்மிகு தர்மலிங்கேசுவரர் திருக்கோயிலில் கம்பிவட ஊர்தி அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

146. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், அம்மைநாயகனூர், அருள்மிகு கதலிநரசிங்கப்பெருமாள் திருக்கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருக்குளத் திருப்பணி மேற்கொள்ளப்படும்.

147. இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோயில், அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் வாசுகி தீர்த்தக் குளம் புனரமைப்பு பணி ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

148. 14 திருக்கோயில்களில் உள்ள திருக்குளங்கள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

149. காஞ்சிபுரம் மாவட்டம், வட்டம் மற்றும் நகர், அருள்மிகு தேவராஜபெருமாள் திருக்கோயிலில் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் திருப்பணி மேற்கொள்ளப்படும்.

150. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் திருப்பணி மேற்கொள்ளப்படும்.

151. கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் திருப்பணி மேற்கொள்ளப்படும்.

152. தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், அருள்மிகு கைலாசநதர் திருக்கோயிலில் ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் திருப்பணி மேற்கொள்ளப்படும்.

153.11 திருக்கோயில்களில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

154.11 திருக்கோயில்களில் உள்ள திருத்தேர்கள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மராமத்து செய்யப்படும்.

155. 12 திருக்கோயில்களில் 14 திருத்தேர்களுக்கு ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் திருத்தேர் பாதுகாப்புக் கொட்டகைகள் அமைக்கப்படும்.

156. தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தென்கரை, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும்.

157. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், வடமதுரை, அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும்.

158. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு நடராஜர் திருக்கோயிலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும்.

159. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருவாமாத்தூர், அருள்மிகு அபிராமேசுவரர் திருக்கோயிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும்.

160. கோவை மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரிமலை, அருள்மிகு மந்திரகிரி வேலாயுதசுவாமி திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும்.

161. புதுக்கோட்டை மாவட்டம், திருமணஞ்சேரி, அருள்மிகு சுகந்த பரிமளேசுவரர் திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும்.

162. திருவாரூர் மாவட்டம் மற்றும் வட்டம், விஜயபுரம், காகிதகாரத்தெரு, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டப்படும்.

163. கோவை மாவட்டம், ஒத்தக்கால்மண்டபம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபத்தில் சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம் கட்டப்படும்.

164. திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மலைச்சுற்றும் பாதையில் 3 இடங்களில் புதியதாக அதி உயர மண்டபங்கள் கட்டப்படும்.

165. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் நவீன வசதிகளுடன் கூடிய வேப்பஞ்சேலை மண்டபம், பொங்கல் மண்டபம் மற்றும் முடி காணிக்கை மண்டபம் ரூ.14.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

166. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்திரகாளியம்மன் திருக்கோயிலில் ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் மகா மண்டபம் மற்றும் வசந்த மண்டபம் கட்டப்படும்.

167. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், தாயமங்கலம், அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் முன்மண்டபம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

168. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் வசந்தமண்டபம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும்.

169.சென்னை, வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வள்ளி மண்டபம் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்த்து புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

170. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் புதியதாக மண்டபம் கட்டப்படும்.

171. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் மாவிளக்கு மண்டபம் அமைக்கப்படும்.

172. 8 திருக்கோயில்களில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் அலங்கார மண்டபம், முடிகாணிக்கை மண்டபம், நவராத்திரி வழிபாட்டு மண்டபம், மாவிளக்கு மண்டபம், வாகன மண்டபம், தேர் மண்டபம் ஆகியவை கட்டப்படும்.

173. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படும்.

174. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (வெங்கங்குடி பாலம் அருகில்) ரூ.3.50 கோடி மதிப்பீட்டிலும், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காதி கிராப்ட் அருகில் ரூ.1 கோடி மதிப்பீட்டிலும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் அமைக்கப்படும்.

175. திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டப்படும்.

176. தருமபுரி மாவட்டம் மற்றும் வட்டம், இலளிகம், அருள்மிகு சென்றாயசுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் வட்டம், பாரியூர், அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் மற்றும் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இராஜேந்திரம், அருள்மிகு ஏகிரி அம்மன் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டப்படும்.

177. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தண்டாயுதபாணி நிலைய வளாகத்திலுள்ள கந்தன் இல்லம், கடம்பன் இல்லம் மற்றும் இடும்பன் குடில் ஆகிய பழுதடைந்த கட்டிடங்களை அகற்றி விட்டு ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதியதாக பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும்.

178. தேனி மாவட்டம், கம்பம், அருள்மிகு கம்பராய பெருமாள் மற்றும் காசி விசுவநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும்.

179.இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோயில் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும்.

180. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர் அருள்மிகு புத்திரகாமேட்டீசுவரர் திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டப்படும்.

181.திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கிரிவீதியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதியதாக அன்னதானக் கூடம் கட்டப்படும்.

182.நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் நகர், அருள்மிகு நாவலடி கருப்பண்ணசுவாமி திருக்கோயிலில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக அன்னதானக் கூடம் கட்டப்படும்.

183.ஈரோடு மாவட்டம், கொடுமுடி, அருள்மிகு மகுடேசுவரர் மற்றும் வீரநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் புதியதாக அன்னதானக் கூடம் கட்டப்படும்.

184.ஈரோடு மாவட்டம், பண்ணாரி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மடப்பள்ளி மற்றும் பிரசாதம் தயார் செய்யும் கூடம் கட்டப்படும்.

185.8 திருக்கோயில்களில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதியதாக அன்னதானக் கூடங்கள் கட்டப்படும்.

186. திண்டுக்கல், ஒருங்கிணைந்த இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் கட்டுதல் பணி ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

187. சிவகங்கை, ஒருங்கிணைந்த இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் கட்டுதல் பணி ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

188. சென்னை, வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் துணை ஆணையர் / செயல் அலுவலர் அலுவலகம் முதல் மற்றும் இரண்டாம் தளம் அமைத்தல் மற்றும் வாகனம் மண்டபம் தரைதளம் அமைக்கும் பணி ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

189. 5 திருக்கோயில்களில் செயல் அலுவலர் அலுவலக கட்டடம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

190. 15 ஆய்வாளர் அலுவலக கட்டடம் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

191. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்படும்.

192. இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்படும்.

193. திருச்சி மாவட்டம், திருவரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்படும்.

194. சென்னை, வேளச்சேரி, அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில். ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்படும்.

195.10 திருக்கோயில்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நந்தவனங்கள் அமைக்கப்படும்.

196. திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நினைவரங்க வளாகத்தில் உள்ள வரிசை வளாகம் விரிவுபடுத்தப்படும்.

197. கோவை மாவட்டம், ஒத்தக்கால்மண்டபம், அருள்மிகு நவகோடி நாராயணபெருமாள் திருக்கோயிலில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திருமதில் கட்டப்படும்.

198. கோவை மாவட்டம், புலியகுளம் அருள்மிகு மாரியம்மன் மற்றும் முந்தி விநாயகர் திருக்கோயிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் தோரணவாயிலுடன் கூடிய திருமதில் கட்டப்படும்.

199. நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் நகர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருமதில் கட்டப்படும்.

200. நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் நகர், அருள்மிகு நாவலடி கருப்பண்ணசுவாமி திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருமதில் கட்டப்படும்.

201. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி, அருள்மிகு ஊன்றீசுவரர் திருக்கோயிலுக்கு அலங்கார நுழைவாயிலுடன் கூடிய மதில்சுவர் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

202. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இரண்டு இடங்களில் அமைக்கப்படும்.

203. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகர், அருள்மிகு கொப்புடையநாயகி அம்மன் திருக்கோயிலில் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் கூடுதல் கடைகள் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

204. 8 திருக்கோயில்களில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் சுற்றுசுவர், படித்துறை, பொருட்கள் பாதுகாப்பு அறை ஆகியவை கட்டப்படும்.

205. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடம், பேருந்து நிலையம் மற்றும் திருக்கோயிலின் வெளிப்புறம் ஆகிய 3 இடங்களில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் வசதிக்காக சுகாதார வளாகம் ஏற்படுத்தப்படும்.

206. 19 திருக்கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குளியலறை, கழிவறை, உடைமாற்றும் அறைகள் மற்றும் சுகாதார வளாகம் ஆகியன ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

207. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பசுக்கள் காப்பகம் அமைக்கப்படும்.

208. பக்தர்கள் பெருவாரியாக வருகை புரியும் கீழ்க்கண்ட திருக்கோயில்களில் தினசரி ஒரு மணி நேரம் இடை நிறுத்த தரிசன வசதி (Break Darshan) ஏற்படுத்தப்படும்.

209. மூன்று திருக்கோயில்களில் உள்ள நூலகங்கள் நவீனப்படுத்தப்படும்.

210.திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 5 சிற்றுந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

Also Read: ரூ.2 ஆயிரம் பொங்கல் கருணைக்கொடை : யாருக்கு இந்த நிதி கிடைக்கும்?