Tamilnadu

“MSME-ல் 50.47 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்து சாதனை!” : சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேருரை!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக் கோரிக்கையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆற்றிய உரை,

2021 - 2022 ஆம் ஆண்டுக்கு முன் கொரோன கால பாதிப்பு, GST பணமதிப்பிழப்பு கடந்த கால அரசின் செயல்பாடுகளால், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி தடைப்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் கழக அரசு பொறுப்பேற்று முதல்வரின் வெற்றிகரமான முன்னோடி திட்டங்களால், தமிழ்நாடு கடந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.69 % வளர்ச்சி அடைந்து இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.

இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய வளர்ச்சியாகும். சமச்சீர் வளர்ச்சி, மகளிர் முன்னேற்றம், நிலையான நிர்வாகம், தொலைநோக்கு திட்டங்களால் இந்திய அளவில் 39 ஆயிரத்து 666 பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளை கொண்டு தமிழ்நாடு முதல் இடம். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 15 சதவிகிதம் கொண்டு முதலிடம்.

தொழில்சாலைகளில் பணியுரியும் மகளிர் எண்ணிக்கையில் 42 சதவீதமாக உயர்ந்து முதல் இடம். திறன் வாய்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் முதல் இடம். இந்திய ரிசர்வ் வங்கியின் தொழில் வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையில் மனித உழைப்பு நாட்களின் அடிப்படையில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதல் இடம். ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் 80.89 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு முதல் இடம்.

உற்பத்தி பொருட்களை மாநிலங்களிடையே எளிதாக கொண்டு செல்வதில் (Logistics) தமிழ்நாடு முதல் இடம். புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு காப்புரிமை (Patent) பெறுவதில் தமிழ்நாடு முதல் இடம்.TN - Start up, கடைசி இடத்தில் இருந்து முன்னேறி இந்திய அளவில் சிறந்த செயற்பாட்டாளர் விருதினை பெற்று தமிழ்நாடு முதல் இடம். நிதி ஆயோக் அமைப்பின் சிறந்த புத்தாக்க சூழல் கொண்ட முதன்மை மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் என்று அனைத்திலும் முதலிடம் வந்ததற்கு காரணம் நமது தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அயராத உழைப்பு மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் தான் பதிவு செய்ய கடைமைப்பட்டுள்ளேன்.

MSME நிறுவனங்களின் முக்கியத்துவம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், வேளாண்மைக்கு அடுத்தப்படியாக அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய முக்கியத் துறையாகும். மேலும், குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்கி, அதிகமாமன வேலைவாய்ப்புகளை வழங்கி, பெரும் தொழிற்சாலைகளுக்கு துணையாக இருந்து நாட்டின் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகிறது.

மேலும் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்கி அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. நாட்டின் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதால் மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகர்புறங்களுக்கு குடிபெயர்வது பெருமளவு தடுக்கப்படுகிறது.

MSME நிறுவனங்கள், இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகித்து அன்னிய செலவாணியை ஈட்டி, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது.

MSME நிறுவனங்களின் முக்கியத்துவம் - கலைஞர்

நாட்டின் தொழில் வளர்ச்சியில் MSME நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதன் முதலாக MSME நிறுவனங்களுக்கு என தனி கொள்கையை 2008 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

MSME நிறுவனங்களின் முக்கியத்துவம் - முதலமைச்சர்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் வந்த முதலமைச்சர் அவர்கள் Start Up தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தகுந்த சூழலை உருவாக்கிட, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை - 2023 யும், தென்னைநார் தொழில் வளர்ச்சியின் மூலம் தென்னை விவசாயிகளின் வருமானம் உயர்திட தென்னைநார் தொழில் கொள்கை 2024 வெளியிட்டுள்ளார்,

புதிய திட்டங்கள்

MSME துறையின் வளர்ச்சிக்காக மாண்புமிகு முதல்வர் அவர்கள் மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, 200-க்கும் மேற்பட்ட உரிமங்களை தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் பெற்றிட ஒற்றைச் சாளர இணைய தளம் 2.O திட்டம், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் துப்புரவு பணியாளர்களுக்கு மானிய விலையில் நவீன இயந்திரங்களை வழங்கி அவர்களையும் தொழில் முனைவோராக உருவாக்கும் துப்புரவு தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டம்.

அனைத்து கைவினை கலைஞர்களுக்கும் மானியத்துடன் கடன் உதவி வழங்கிடும் கலைஞர் கைவினைத் திட்டம் தொழில்முனைவோருக்கு எளிதில் கடன் கிடைத்திட 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதம் அளித்திடும் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் அரசு நிறுவனங்களுக்கு MSME நிறுவனங்கள் வழங்கும் சேவை மற்றும் விற்பனைகளுக்கான பட்டியல்களைவங்கியில் வைத்து எளிதாக கடன் பெற தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் - TN TReDS திட்டம்.

கிராமப்புறப் பகுதிகளில் உள்ள தொழில்முனைவோரின் வளர்ச்சிக்காகவும், நிலையான வேலைவாய்பிற்காகவும் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டம் - Micro Cluster MSME நிறுவனங்கள் உலகத்தரத்தில் உற்பத்தி செய்திட நவீன தொழில்நுட்ப வசதியை அளித்திடும் பெருங்குழும மேம்பாட்டுத் திட்டம் - Mega Cluster தொழிலாளர்கள் பணிபுரியும் பகுதியிலேயே அவர்களுக்கு குறைந்த வாடகையில் தொழிலாளர் தங்கும் விடுதிகள் தொழில்முனைவோர்களின் நீண்ட நாள் கோரிகையை நிறைவேற்றும் வகையில் சிட்கோ தொழில்மனைகளுக்கு பட்டா தொடக்க நிலையில் உள்ள Startup நிறுவனங்களுக்கு உதவிடும் புத்தொழில் ஆதார நிதி வழங்கும் திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை புத்தொழில் முனைவோராக உருவாக்கிடும் SC / ST StartUp ஆதார நிதி திட்டம் சமச்சீர் தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் Start UP நிறுவனங்களுக்கு வட்டார புத்தொழில் மையங்கள் SC, ST மற்றும் விளிம்பு நிலை சமூகத்தினரால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் தந்தை பெரியார் சமூக நீதி தொழில் வளர் மையம் வேளாண் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திட தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் - TN-APEx உருவாக்கம்.

தென்னை நார் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் – டான் காயர் (TAN-COIR) உருவாக்கம் பள்ளி மாணவர்களிடம் புதிய கண்டுப்பிடிப்புகளை ஊக்குவிக்க பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம். இதுவரை நிதிநிலை அறிக்கையில் ரூ, 225 கோடி நிதி ஒதுக்கி அடுத்த 5 ஆண்டுகளில், 1 லட்சம் மகளிரை தொழில்முனைவோராக்கும் திட்டம் என எண்ணற்ற புதிய திட்டங்களை செயல்படுத்தி 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் புதிய திட்டங்கள் ஏதும் இன்றி நலிவுற்று இருந்த MSME நிறுவனங்களின் வளர்ச்சி பாதைக்கு வழிகாட்டியவர் முதலமைச்சர் அவர்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

திட்டங்களில் சீர்திருத்தம்

பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியது மட்டும் இல்லாமல் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களான வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டமான NEEDS ஆகிய திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான தொழில் முனைவோர்கள் பயன் அடையும் வகையில், திட்ட மதிப்பீடு, மானியம், வயது உச்ச வரம்பு ஆகியவற்றை உயர்த்தியும், கல்வி தகுதியினை தளர்த்தியும், பல சீர்திருத்தங்களை கழக அரசு கொண்டுவந்து செயல்படுத்தி உள்ளது.

முதலீட்டு மானியம் புதிதாக சேர்க்கப்பட்ட தொழில்கள்

MSME தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று முதலீட்டு மானிய திட்டத்தின் கீழ்.அளவிடும் கருவிகள், சோதனை உபகரணங்கள், தென்னை நார் உற்பத்தி நிறுவனங்களுக்கான பசுமைக்குடில் உலர்த்தி, இயந்திர உலர்த்தி, மாசு கட்டுப்பாட்டு உபகரணங்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், நாடா இல்லா தறி இணைப்புகள், சித்திர நெசவு விசைத்தறிகள், முதலீட்டு மானியம்சிறப்பு வகை ; சேவைத் தொழில்கள் பாரம்பரிய தொழில்களான உப்பு உற்பத்தி, வெள்ளி கொலுசு – வெள்ளி விளக்கு, பித்தளைப் பொருட்கள் பித்தளை பாத்திரங்கள், பூட்டு உற்பத்தி, பட்டு சார்ந்த தொழில்கள், வீட்டு உபயோகத் துணி ஆகியவையும், சேவை தொழில்களானசேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள், குளிரூட்டப்பட்ட போக்குவரத்து வாகனங்கள்,சோதனை ஆய்வகங்கள் ஆகியவை மானியப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டு மானியம் வழங்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு அதிமுக – தி.மு.க

MSME துறைக்கு 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் ரூ. 3 ஆயிரத்து 617 கோடியே 62 லட்சம் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் அவர்கள், இந்த 5 ஆண்டுகளில் மட்டும், ரூ.6 ஆயிரத்து 626 கோடி நிதி ஒதுக்கி 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 2 மடங்கு நிதி வழங்கி MSME துறையை தூக்கி நிறுத்திய பெருமை நம் முதல்வருக்கு உண்டு என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் முன்னோடி திட்டங்கள்

MSME தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக முதலமைச்சர் அவர்கள் கொண்டுவந்த முன்னோடி திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளம் ஆகிய திட்டங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்கள் தற்போது செயல்படுத்தி வருகின்றன.

ஒன்றிய அரசின் 2024-2025 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாடு அரசின் வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளம் பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது என பாராட்டியுள்ளது. தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டமானது தொழில் முனைவோரின் வங்கி கடன்களுக்கு 90 சதவீதம் வரை அரசு உத்தரவாதம் அளிக்கிறது இந்த திட்டத்தின் கீழ் 42 ஆயிரத்து 215 தொழில் முனைவோர்களின், ரூ. 7 ஆயிரத்து 550 கோடி வங்கி கடனுக்கு, தமிழக அரசு ரூ.725 கோடியே 82 லட்சம் கடன் உத்தரவாதம் அளித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு வர்த்தக வரவு தள்ளுபடி தளம் TN -TReDS

MSME தொழில் நிறுவனங்கள் விலைப் பட்டியல்களை வங்கிகளில் வைத்து விரைவாக கடன் பெற வழிவகை செய்யும் தமிழ்நாடு வர்த்தக வரவு தள்ளுபடி தளம்TN –TReDS திட்டத்தின் கீழ் 1,329 MSME நிறுவனங்களின் ரூ. 4 ஆயிரத்து 618 கோடி மதிப்பிலான விலைப் பட்டியல்களுக்கு ரூ. 4 ஆயிரத்து 92 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Single window 2. ஓ

புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கும் போது, அனைத்து உரிமங்களையும் ஒரே இடத்தில் பெற்றிட முதலமைச்சர் அவர்களால் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒற்றைச்சாளர இணைய தளம் Single window 2. O மூலம், இதுவரை 73 ஆயிரத்து 288 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 66 ஆயிரத்து 595 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர் கைவினைத் திட்டம்

கைவினைக் கலைஞர்களுக்காக ஒன்றிய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டம்மாணவர்கள் உயர் கல்வி பயிலுவதை தடுத்து குலத் தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளதால் அதற்கு மாற்றாக, முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கைவினைக் கலைஞர்களை முன்னேற்றும் வகையில் சமூக பாகுபாடு இல்லாமல் அனைத்து கைவினைஞர்களையும் உள்ளடக்கிய கலைஞர் கைவினை திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார்கள்.

விஸ்வகர்மா திட்டத்தை விட கலைஞர் கைவினை திட்டத்தின் சிறப்பை இந்த அவைக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். ஒன்றிய அரசின் திட்டத்தில் பெற்றோர் செய்து வரும் தொழிலேயே பயனாளி செய்ய வேண்டும் என உள்ளது. கலைஞர் கைவினைத் திட்டத்தில் 5 வருடம் அனுபவம் உள்ள கைவினைக் கலைஞர் எந்த ஒரு தொழிலையும் தேர்வு செய்யலாம்.

ஒன்றிய அரசின் திட்டத்தில் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது என உள்ள நிலையில் நமது திட்டத்தில் இளைஞர்களின் உயர்கல்வி பாதிக்காத வகையில் 35 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் திட்டத்தில் 18 வகையான கைவினைத் தொழில்களுக்கு முதலீட்டு மானியம் இல்லாமல் கடன் மட்டுமே வழங்கப்படும் நிலையில் நமது திட்டத்தில் 25 வகையான தொழில்களுக்கு 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் திட்டத்தில் கடன் 2 தவணைகளாக வழங்கப்படும் நிலையில் நமது திட்டத்தில் கடன் ஒரே தவணையாக வழங்கப்படும். இந்த திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூரில் வரும் 18 ஆம் தேதி முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தி.மு.க - அ.தி.மு.க ஆட்சியில் தொழில்முனைவோர்

ஒப்பீடு தொழில் துறையில் தமிழ்நாட்டை முன்னனி மாநிலமாக மற்றுவதில் முக்கிய பங்காற்றும் சுயதொழில் திட்டங்கள் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 55 ஆயிரத்து 230 நபர்கள் தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டார்கள்.

4 ஆண்டு கழக ஆட்சியில் 59 ஆயிரத்து 584 நபர்கள்

புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். அதிமுக அரசு 10 ஆண்டுகளில்

செய்ததை திமுக அரசு 4 ஆண்டுகளில் செய்து சாதனை படைத்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக நீதி

எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் கொள்கையின் படி கழக அரசில் உருவாக்கப்பட்ட 59 ஆயிரத்து 584 தொழில்முனைவோர்களில் 21 ஆயிரத்து 281 பெண்கள், 9 ஆயிரத்து 224 பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர், 2 ஆயிரத்து 497 சிறுபான்மையினர், 717 மாற்றுத் திறனாளிகள் என தொழில் முனைவோர்களை உருவாக்கி, சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலை நாட்டி உள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

இந்தியாவிற்கே வழிக்காட்டும் திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம், ரூ. 289 கோடியே 73 லட்சம் மானியத்துடன் ரூ. 539 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 3 ஆயிரத்து 166 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.

வாங்குவோர் – விற்போர் சந்திப்பு

MSME துறையின் கீழ் செயல்பட்டு வரும் FaME –TN (ஃபேம்- டிஎன்) மூலம் ஏற்றுமதியை ஊக்கப்படுத்திடவும், புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்கிடவும், வாங்வோர் – விற்போர் சந்திப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்

மாநாட்டிலும், அயலக தமிழர் தின விழாவிலும், கோவையில் நடைபெற்ற வாங்வோர் – விற்போர் சந்திப்புகளில் ​​947 MSME நிறுவனங்களிடமிருந்து 89 வெளிநாட்டு கொள்முதலாளர்கள் 22.88 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 215 கோடியே 50 லட்சம் மதிப்பிற்கு கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

MSME வழங்கப்பட்ட மானியம்

MSME நிறுவனங்களை ஊக்கப்படுத்த முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் முதலீட்டு மானியமாக ரூ.1409 கோடியே 89 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், கழக அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் ரூ. 1290 கோடியே 88 லட்சம் முதலீட்டு மானியமாக வழங்கப்பட்டுள்ளது இந்த மானியம் அதிமுக ஆட்சியில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக ரூ.141 கோடி வழங்கப்பட்ட நிலையில் கழக ஆட்சியில் 2 மடங்கு அதிகமாக ரூ.290 கோடி ஆக வழங்கப்பட்டுள்து என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வசதியாக்கல் மன்றங்கள்

கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் குறு, சிறு நிறுவனங்களுக்கு வழங்காத நிலுவைத் தொகையை, சட்டப்பூர்வமாக பெற்றுத்தர சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 மண்டலங்களில் வசதியாக்கல் மன்றங்கள் செயல்பட்டுவருகிறது.

இதன் தேவையினை உணர்ந்து,வேலூர், தூத்துக்குடி ஆகிய 2 மண்டலங்களில் புதிய வசதியாக்கல் மன்றங்கள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த மன்றங்கள் மூலம் 4 ஆண்டுகளில் 2,434 குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ. 447 கோடியே 4 லட்சம் கொள்முதல் நிறுவனங்களிடம் இருந்து பெற்று வழங்கப்பட்டுள்ளது.

சிட்கோ - புதிய தொழிற்பேட்டை

சமச்சீர் தொழில் வளர்ச்சையை ஏற்படுத்திட MSME தொழில் நிறுவனங்களுக்காக, முதலமைச்சர் அவர்களால், கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 365 கோடி மதிப்பீட்டில்,621 ஏக்கர் பரப்பளவில் 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டு, 2513 தொழில்மனைகள் தொழில்முனைவோர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 239.54 ஏக்கர் பரப்பளவில் ரூ.209 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில், 6 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் - புதிய தொழிற்பேட்டைகள்

இந்த நிதி நிலை அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் – திருமுடிவாக்கம், விழுப்புரம் மாவட்டம் – சாரம், நாயனூர், கரூர் மாவட்டம் – நாகம்பள்ளி, திருச்சி மாவட்டம் – சூரியூர், மதுரை மாவட்டம் – கருத்தபுளியம்பட்டி, இராமநாதபுரம் மாவட்டம் – தனிச்சியம், தஞ்சாவூர் மாவட்டம் - நடுவூர், திருநெல்வேலி மாவட்டம் – நரசிங்க நல்லூர் ஆகிய 9 இடங்களில் 398 ஏக்கர் பரப்பளவில்ரூ. 366 கோடி மதிப்பில் புதிய சிட்கோ தொழில் பேட்டைகள் அமைக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிட்கோ - பொது வசதி மையம்

MSME நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக அவர்கள் கூட்டாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஒன்றிய அரசின் குறு, சிறு தொழில் குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பொது வசதி மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் 593 பொது வசதி மையங்கள் அமைப்பதில் 103 பொது வசதி மையங்கள் தமிழ்நாட்டில் அமைக்க அனுமதி பெறப்பட்டது.

இதில் 73 திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே - தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். குறும் குழுமங்கள் சாதனை Micro Cluster கிராமபுர தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் கழக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழகம் முழுவதும் 45 குறுந்தொழில் குழுமங்கள் Micro Cluster அறிவிக்கப்பட்டது. இதில் 11 குழுமங்கள் ரூ. 54 கோடியே 6 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ. 44 கோடியே 15 லட்சம் மானியம் வழங்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதர குழுமங்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருங் குழுமங்கள் - Mega Clusters துல்லிய உற்பத்தி பெருங் குழுமம்

தமிழ்நாட்டின் MSME தொழில் நிறுவனங்களின் உற்பத்தி தரத்தினை உலக அளவில் உயர்த்திடும் வகையில் பெருங் குழுமத் திட்டம் - Mega Clusters கழக அரசால் கொண்டுவரப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் - திருமுடிவாக்கத்தில் ரூ. 33 கோடியே 33 லட்சம் அரசு மானியத்துடன் ரூ. 47 கோடியே 62 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும்துல்லிய உற்பத்தி பெருங் குழுமத்தில் ரூ. 18 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றபட்ட முதல் கட்ட பணியினை முதலமைச்சர் அவர்கள் 22.11.2024 அன்று திறந்து வைத்தார்கள்.

மருந்தியல் பெருங்குழுமம்

விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனத்தில் ரூ. 71 கோடியே 56 லட்சம் அரசு மானியத்துடன் ரூ.155 கோடி திட்ட மதிப்பீட்டில், அமைக்கப்பட்டு வரும் மருந்தியல் பெருங்குழுமத்தின் முதல் கட்ட பணியாக 46 தொழில்மனைகள் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் அவர்களால் விரைவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை - தங்க நகை தொழில் பூங்கா

கோவை மாவட்ட தங்க நகை தொழில்முனைவோர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் அவர்களால் கோயம்புத்தூர் - குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் 9 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி தொழில் பூங்கா அமைக்க அறிவிக்கப்பட்டு. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அவர்களால் விரைவில் அடிக்கல்

நாட்டப்படவுள்ளது என்பதை மகிழிச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அடுக்குமாடி தொழில் வளாகங்கள் -கிண்டி மற்றும் அம்பத்தூர் குறுந்தொழில்கள் தொடங்கிட நகர்புரங்களில் போதிய இடவசதி இல்லாததால், அவர்கள் உடனடியாக தொழில் தொடங்கிட வழிவகை செய்திடும் அடுக்குமாடி தொழில் வளாக திட்டத்தின் கீழ் சென்னையில் கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளிலும், சேலம் மாவட்டம் - அரிய கவுண்டம்பட்டியிலும், ரூ.183 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் 366 தொழில் கூடங்கள் கொண்ட 3 அடுக்குமாடி தொழில் வளாகங்கள் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 4 இடங்களில், ரூ.184 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழில் கூடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர் தங்கும் விடுதி

MSME தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வெளியூர் தொழிலாளர்கள் அந்த பகுதியிலேயே குறைந்த வாடகையில் தங்கி பணிபுரிய சென்னை - அம்பத்தூர் தொழில் பேட்டை கோயம்புத்தூர் - குறிச்சி தொழில்பேட்டை ஆகிய இடங்களில் ரூ. 61 கோடியே 85 லட்சம் மதிப்பில் 1698 தொழிலாளர்கள் தங்கும் வகையில் தொழிலாளர் தங்கும் விடுதிகள் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

TAN- COIR கயிறு குழுமங்கள்

கயிறு தொழில்களின் மேம்பாட்டிற்காக, தமிழ்நாட்டில் 6 இடங்களில் ரூ.37 கோடியே 81 லட்சம் மானியத்துடன் ரூ.51 கோடியே 8 லட்சம் மதிப்பில், கயிறு குழுமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் பேராவூரணி, பொள்ளாச்சி K-பரமத்தி, குண்டடம் ஆகிய கயிறு குழுமங்கள் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. தென்னை நார் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுவரும் ஏற்றுமதி மையம் வரும் மே மாதம் தொடங்கி வைக்கப்பட உள்ளதுஎன்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதார நிதி

கழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் Start-Up நிறுவனங்களை உருவாக்க, புத்தொழில் முனைவோர்களுக்கு ஆதார நிதி வழங்கும் (TANSEED) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 169 நிறுவனங்களில் ரூ.18 கோடியே 79 லட்சம் முதலீடும், 36 SC / ST Start-Up நிறுவனங்களில் ரூ.51 கோடி 20 லட்சம்

முதலீடும், ஆக மொத்தம் கடந்த 4 ஆண்டுகளில் 205 Start-Up நிறுவனங்களில், ரூ. 69 கோடியே 99 லட்சம் தமிழக அரசு முதலீடு செய்துள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன்.

TAN - FUND

Startup நிறுவனங்களுக்கு முதலீடு என்பது மிகவும் முக்கியமானது.Startup நிறுவனங்களுக்குதே வையான முதலீடுகளைப் பெற தனியார் முதலீட்டாளர்களையும், Startup நிறுவனங்களையும் இணைக்கும்TANFUND இணைப்புத் தளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் 8 ஆயிரத்து 600 Startup நிறுவனங்களும், 215 முதலீட்டாளர்களும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 19 Startup நிறுவனங்களுக்கு ரூ.103 கோடியே 25 லட்சம்

தனியாரிடமிருந்து முதலீடுகள் பெறப்பட்டுள்ளதுஎனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

EDII

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனமான - EDII மூலம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்முனைவு மற்றும் புத்தாக்க சிந்தனையை உருவாக்க, பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி – கல்லூரிகளின் பயிலும் 31 லட்சத்து 11 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு தொழில் முனைவு மற்றும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்திட, கடந்த 4 ஆண்டுகளில்புத்தாக்க பற்று சீட்டின் கீழ் 415 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ. 10 கோடியே 69 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன்.

TANSI

தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனமான டான்சி நிறுவனத்தின் கீழ் 20 உற்பத்தி நிலையங்களும், 2 காட்சியத்துடன் கூடிய விற்பனை நிலையமும் இயங்கி வருகிறது. கழக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகளில் ரூ. 425 கோடிக்கு விற்பனை செய்து ரூ. 66 கோடி லாபம் ஈட்டி உள்ளது.

கழக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.100 கோடிக்கு மேல் பணி ஆணைகளை பெற்று வந்த டான்சி நிறுவனம், கடந்த ஆண்டு ரூ. 150 கோடிக்கு மேல் பணி ஆணைகளை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. தொழிற்கூட்டுறவுச் சங்கங்கள் கிராமப்புர தொழிலாளார்களுக்கு தொடர் வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்திட தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள், இண்ட்கோசர்வ், சேகோசர்வ் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்படும் 262 சங்கங்களில் 68 ஆயிரத்து 761 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த தொழிற்கூட்டுறவு சங்கங்கள்,கடந்த நிதியாண்டில், ரூ.1755 கோடியே 39 லட்சம் அளவிற்கு விற்பனை செய்து, ரூ. 106 கோடியே 95 லட்சம் இலாபம் ஈட்டியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

பாம்பு பிடிப்போர் தொழிற்கூட்டுறவு சங்கம்

பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள இருளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இத்துறையின் கீழ் 2 பாம்பு பிடிப்போர் தொழிற்கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது. சங்க உறுப்பினர்கள் பிடிக்கும் பாம்புகளில் இருந்து விஷ முறிவு மருந்து தயாரிக்க விஷம் எடுக்கப்படுகிறது, செங்ககல்படு இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவுச் சங்கம் கடந்த ஆண்டு 599 கிராம் நஞ்சினை ரூ.2 கோடியே 97 லட்சத்திற்கு விற்று, ரூ.86 லட்சம் லாபம் ஈட்டி உள்ளது.

இண்ட்கோசர்வ்

சிறு தேயிலை விவசாயிகள் வழங்கும் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்திட தொடங்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பான இண்ட்கோசர்வ் (INDCOSERVE) நிறுவனம் கடந்த ஆண்டு, 11 ஆயிரத்து 178 மெட்ரிக் டன் தேயிலை உற்பத்தி செய்து 24 ஆயிரம் தேயிலை விவசாயிகளுக்கு ரூ. 77 கோடியே 87 லட்சம் வழங்கியுள்ளது.

சிறு தேயிலை விவசாயிகள் பயன் அடையும் வகையில், நபார்டு வங்கி நிதி உதவியுடன்15 தேயிலை தொழிற்சாலைகள் ரூ. 67 கோடியே 75 லட்சம் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சேகோசர்வ்

மரவள்ளி கிழங்கு பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்திடவும், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்களின் பொருட்களை இடைதரகர்களின் தலையீடு இன்றி நேரடியாக விற்பனை செய்யவும், தொடங்கப்பட்ட சேகோசர்வ் கூட்டுறவு சங்கம் கடந்த 2024 – 2025 நிதியாண்டில் ரூ. 522 கோடியே 83 லட்சம் விற்பனை செய்து, ரூ. 3 கோடியே 29 லட்சம் லாபம் ஈட்டி உள்ளது.

சேகோசர்வ் வர்த்தக முத்திரை

ஜவ்வரிசியின் தனித்துவத்தை உறுதிப்படுத்த “சேலம் சேகோ” என்ற புவிசார் குறியீட்டினை பெற்றுள்ளது. வேதிப்பொருட்கள் கலப்படமில்லாத ஜவ்வரிசிக்கு புதிய வர்த்தக முத்திரை 20.12.2024 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முத்திரையுடன் ஜவ்வரிசி விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

தாய்கோ வங்கி MSME நிறுவனங்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் தாய்கோ வங்கி, கடந்த ஆண்டில் ரூ. 1,056 கோடியே 18 லட்சம் வைப்பு நிதி திரட்டி ரூ. 12 கோடியே 77 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் பொருளாதராத்தின் முதுகெலும்பாக விளங்கும் MSME தொழில் நிறுவனங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அயராத உழைப்பாலும் சீரிய திட்டங்களாலும்,இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. MSME தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யும் உதயம் பதிவில் 50 லட்சம் என்ற மையில் கல்லை கடந்து 50 லட்சத்து 47 ஆயிரத்து 258 நிறுவனங்கள் பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அவர்களின் இலக்கான 2030-ல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நிலையை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

Also Read: ரூ.1,000 கோடியில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!