Tamilnadu

”இந்தியை மட்டும் வளர்க்கும் ஒன்றிய அரசு” : கனிமொழி என்.வி.என் சோமு MP குற்றச்சாட்டு!

இந்திய அலுவல் மொழித்துறை தேசிய அளவில் இந்தியை மட்டும் ஊக்குவிற்பதாக நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவையில் பேசிய அவர், இந்தியை மேம்படுத்துவதற்காக அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகையின் விவரங்கள் என்ன என கேட்டுள்ள அவர் இந்த நடவடிக்கை மாநிலங்களின் மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை குறைத்து மதிப்பிடுவதுடன் பிராந்திய மொழி பேசுபவர்களுக்கு அநீதி ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியலமைப்பின் வழிகாட்டுதலின்படி அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் சமமான மேம்பாட்டை உறுதி செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என பதிலளிக்குமாறும் கனிமொழி என்.வி.என் சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: சென்னை – தூத்துக்குடி இடையில் புதிய ரயில்கள் : மக்களவையில் கனிமொழி MP கோரிக்கை!