Tamilnadu
”இந்தியாவிற்கே வழிகாட்டும் தீர்மானம்” : முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு!
தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று, ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த இந்த தீர்மானத்தை, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு தெரிவித்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியது வருமாறு:-
வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி)
”இந்தியாவிற்கே வழிகாட்டியாக வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்த பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக வரவேற்கிறேன்.”
கொங்கு ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி)
”இந்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து எப்போது எதிர்ப்பு குரல் வரும் என்று இந்தியா முழுவதும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கான முன்னெடுப்பை இப்போது முதலமைச்சர் எடுத்துள்ளார். ”
ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)
”இன்றைக்கு மிக சிறப்பான தீர்மானம் ஒன்றை முன்மொழித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதை நான் வழிமொழிகிறேன்.”
சதன் திருமலை குமார் (மதிமுக)
”ஒன்றிய அரசின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது. முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன்.”
டி.ராமச்சந்திரன் (CPI)
”இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கே இன்றைக்கு நமது முதலமைச்சர் பாதுகாப்பாக திகழ்கிறார். இன்று கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆதரித்து வரவேற்கிறேன்.”
நாகை மாலி (CPM)
”இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையில் வக்ஃபு திருத்த மசோதா உள்ளது. இந்த சட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முதலமைச்சர் ஒரு நல்ல தீர்மானத்தை முன்மொழிந்து இருக்கிறார்.”
சிந்தனைச்செல்வன் MLA (விசிக)
”பன்மை தன்மையை மறுதலித்து இந்தியாயை சூனிய பாதையிலே வழிநடித்திக் கொண்டிருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு திருத்த மசோதாவை, உரிய நேரித்தில் முதலமைச்சர் எதிர்கொண்டு இருக்கிறார். ”
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!