Tamilnadu

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் விமான நிலையத்தில் கைது : காவல்துறை அதிரடி !

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களில் பெண்களிடம் செயின் அறுப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தன. இதை அடுத்து சென்னை மாநகர போலீசார் தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்கள் இதை போல் செயின் அறுப்பு சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும், இதற்காக இரு சக்கர வாகனத்தை திருடி அந்த திருட்டு வாகனம் மூலம் இந்த செயின் அறுப்பு சம்பவங்களில் ஈடுபாடுவதாகவும் தகவல் தெரிந்தது.

அதோடு அந்த கொள்ளையர்கள் வடமாநிலங்களில் இருந்து விமானங்களில் சென்னைக்கு வந்து இதை போல் செயின் அறுப்பு சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு மீண்டும் விமானங்களில் வட மாநிலங்களுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்தது. அதோடு அந்த கொள்ளையர்களில் ஒருவனின் செல்போன் எண் போலீசுக்கு கிடைத்ததால், அந்த செல்போன் எண் டவரை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அந்த செல்போன் எண் டவர், சென்னை உள்நாட்டு விமான நிலையம் நோக்கி வந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது. எனவே இந்த கொள்ளையர்கள் சென்னை நகரில் சுமார் எட்டு இடங்களில், செயின், அறுப்பு சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு, அறுக்கப்பட்ட தங்க செயின்களுடன், வடமாநிலங்களுக்கு தப்பிச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்து கொண்டு இருக்கின்றனர் என்று தெரிந்து, தனிப்படை போலீசார் பின் தொடர்ந்து வந்தனர்.

அதோடு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான கவுண்டர்களில் இந்த கொள்ளையர்கள் பற்றிய விவரங்களை கொடுத்து, அவர்கள் விமானங்களில் செல்வதற்கு போர்டிங் பாஸ் வாங்க வந்தால் கொடுக்காமல் நிறுத்தி வைக்க படியும் தெரியப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுராஜ் (28) என்பவர் விமானத்தில் செல்வதற்கு போர்டிங் பாஸ் வாங்க வந்திருந்தார். ஆனால் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் அவர் மீது சந்தேகப்பட்டு, போர்டிங் பாஸ் கொடுக்காமல், நிறுத்தி வைத்து வெளியில் தயாராக நின்று கொண்டிருந்த சென்னை மாநகர பணிப்படை போலீசில் ஒப்படைத்தனர்.

அதைப்போல் சென்னையில் இருந்து மும்பை செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஜாபர் (26) என்ற இளைஞர், போர்டிங் பாஸ் வாங்க வந்த போது, அவரையும் ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் சென்னை மாநகர தனிப்படை போலீசில் ஒப்படைத்தனர்.

இதை அடுத்து சென்னை மாநகர தனிப்படை போலீசார், இருவரையும் பலத்த பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து, பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இவர்கள் 8 பேரும் சேர்ந்து, சென்னை மாநகரில் குறிப்பாக அடையாறு, நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் செயின்அறுப்பில் கடந்த 2 தினங்களாக ஈடுபட்டு உள்ளது தெரிய வந்தது. அதோடு அவர்களிடமிருந்து சில செயல்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து இவர்கள் மீது உள்ள வழக்குகள் அனைத்தும் சென்னை அடையாறு காவல் மாவட்ட எல் கையில் வருவதால், தனிப்படை போலீசார் சென்னை அடையாருக்கு இரண்டு வட மாநில கொள்ளையர்களையும் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாநிலங்களில் இருந்து விமானங்களில் சென்னைக்கு வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் செயின் அடுப்பு கொள்ளைகளில் ஈடுபட்டு விட்டு, மீண்டும் விமானங்களில் வட மாநிலங்களுக்கு தப்பிச்செல்ல முயன்ற கொள்ளையர்கள் இரண்டு பேரை சென்னை விமான நிலையத்தில், தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: இந்தியாவின் ஒரே மொழி இந்திதான் என்று சொல்லி அரசியல் செய்தவர்தான் அமித்ஷா - முரசொலி விமர்சனம் !