Tamilnadu
"புதிய பேருந்து நிலையங்கள்" : 57 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் கே.என்.நேரு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு 57 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
1. குப்கோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்களும், ஈரோடு மாநகராட்சி ஆற்காடு, இராணிப்பேட்டை நகராட்சிகளின் பேருந்து நிலையங்கள் ரூ.142.68 கோடியில் கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.
2. கடலூர், தஞ்சாவூர், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காரமடை, கிருஷ்ணகிரி, குடியாத்தம், கொமாரபாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துரையூர், தேனி, அல்லிநகரம், பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி, விருதுநகர் ஆகிய நகராட்சிகளிலுள்ள பேருந்து நிலையங்கள் ரூ.84,26 கோடியில் மேம்படுத்தப்படும்.
3.ரூ.704.76 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படும்.
4.தூத்துக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சிகள், ஆத்தூர், திருத்துறைப்பூண்டி, தேவகோட்டை, புஞ்சைப் புளியம்பட்டி, பெரியகுளம், திருவாரூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.62.95 கோடி மதிப்பீட்டில் புதிய சந்தைகள் அமைக்கப்படும்.
5. வால்பாறை நகராட்சியில் ரூ.9 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும்.
6.ரூ.27.26 கோடி மதிப்பீட்டில் 50 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
7. ரூ.311.78 கோடியில் 69,500 புதிய LED தெருவிளக்குகள் அமைக்கப்படும். 45,700 பழைய தெருவிளக்குகள் புதிய LED விளக்குகளாக மாற்றப்படும்.
8.வால்பாறை நகராட்சியில் ரூ.6 கோடியில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.
9.புதியதாக உருவாக்கப்பட்ட நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாநகராட்சிகளில் ரூ.48 கோடியில் புதிய மண்டல அலுவலகங்கள் கட்டப்படும்.
10.மாநகராட்சி, நகராட்சி, நகர்ப்புர உள்ளாட்சி பள்ளிகளுக்குத் தேவையான புதிய வகுப்பறைகள், இதர உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.87.10 கோடியில் அமைக்கப்படும்.
11. திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய மூன்று தேர்வு நிலை நகராட்சிகளை சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.
12.11 பேரூராட்சிகளில் ரூ.49 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
13. 8 பேரூராட்சி பேருந்து நிலையங்கள் ரூ.10 கோடியில் நவீனமயமாக்கப்படும்.
14. போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பேரூராட்சிகளில் ரூ.33 கோடியில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படும்.
15. பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகள் ரூ.670 கோடியில் சீரமைக்கப்படும்.
16.ரூ.60 கோடியில் அனைத்து கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் அளவுமானிகள் பொருத்தப்படும்.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!