Tamilnadu
"மக்கள் கொடுத்த சம்மட்டி அடி" - அண்ணாமலையை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு !
திருச்செந்தூர், இராமேஸ்வரம் கோவில்களில் இரு பக்தர்களும் உடல்நல குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். கூட்டநெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேற்று முன்தினம் (16.03.2025) சுவாமி தரிசனம் செய்ய வருகைதந்த காரைக்குடியை சேர்ந்த திரு.ஓம்குமார், அவரது குடும்பத்தினர் முன்னரே தரிசனம் செய்ய வரிசையில் சென்ற நிலையில் தனியாக சென்ற போது அவருக்கு ஏற்கனவே உள்ள மூச்சுத்திணறல் நோயினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.
அதேபோன்று இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு இன்று (18.03.2025) விடியற்காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கிய நிலையில் காணப்பட்டதால் அவரை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட இரண்டு திருக்கோயில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை. பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்கள் உள்ளிட்ட 17 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து திருக்கோயில்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தனி வரிசைமுறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியால் அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறையின் மீது இதுபோன்ற களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
"மோடியின் அமைச்சரவையில் 39 % பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்" : அமித்ஷாவுக்கு ஆ.ராசா MP பதிலடி !
-
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்காக... இழப்பீடு தொகையை அதிகரித்த தமிழ்நாடு அரசு : முழு விவரம் உள்ளே !
-
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 66 புதிய பள்ளிக் கட்டடங்கள் - 818 பேருக்கு பணி நியமனம் : முழு விவரம் உள்ளே!
-
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!