Tamilnadu

முதல்வர் விரிவான காப்பீடு திட்டம் : திமுக ஆட்சிக்கு வந்ததும் நடந்த மாற்றம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த வெள்ளிகிழமை நிதிநிலை அறிக்கையும், சனிக்கிழமை அன்று வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் உரையாற்றினார், அப்போது பேசிய அவர், "முதல்வர் விரிவான காப்பீடு திட்டத்தில் திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு 1 கோடியே 47 லட்சம் குடும்பப் பயனடைந்து வருகிறார்கள்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பிரீமியம் ரூ. 691 கொடுக்கப்பட்டது, திமுக வந்தவுடன் பிரீமியம் ரூ 841 உயர்த்தி வழங்கப்பட்டது. முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆண்டு வருமானம் 72 ரூபாயாக இருந்தது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது.

மருத்துவ காப்பீட்டுக்கான மருத்துவமனைகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் 970 ஆக இருந்தது திமுக வந்தவுடன் 2175 ஆக உயர்த்தப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகம் முதல்வர் விரிவான காப்பீடு திட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது"என்று கூறினார்.

Also Read: ”இந்தியை திணிக்கவில்லை என்று ஒன்றிய அமைச்சர் சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை” : சு.வெங்கடேசன் MP