Tamilnadu
”நீதி வேண்டும்... நீதி வேண்டும்...” : நாடாளுமன்றத்தில் தமிழில் முழக்கமிட்ட தி.மு.க MP-க்கள்!
2025 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்.13 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 2 ஆவது அமர்வு இன்று தொடங்கியது.
2 ஆவது அமர்வு இக்கூட்டத் தொடரின் முதல் நாளே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டது தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டது தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் ஒன்றிய அரசு பழிவாங்குகிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக நிதி விடுவிக்காததை ஏற்க முடியாது. பழிவாங்கும் நடவடிக்கை.
சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாட்டை வஞ்சிப்பதா? புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மறுப்பதா? தமிழ்நாட்டுக்கான கல்விநிதி ரூ.2000 கோடியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
அப்போது பதிலளித்து பேசும் போது தமிழ்நாட்டை அவமதிக்கும் விதமாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். இதற்கு தி.மு.க எம்.பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், ”நீதி வேண்டும்... நீதி வேண்டும்...” என தி.மு.க MP-க்கள் தமிழில் முழக்கமிட்டனர்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?