Tamilnadu
திமுக ஆட்சியில் சுமார் 40 அணைகள் கட்டப்பட்டுள்ளது - அமைச்சர் துரைமுருகன் பேச்சு !
வேலூர் மாவட்டம் கே.வி குப்பத்தில் ரூபாய் 2.5 கோடி மதிப்பில் மோர் தானா அணையின் இடதுபுற கால்வாயை தூர்வாரி புனரமைக்கும் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கே.வி. குப்பம் பகுதியில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு புதிதாக தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ”மோர் தானா அணையின் கால்வாயின் மூலம் பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கடந்த முறை அன்னங்குடி ஏரி வரை சென்ற மோர்தன கால்வாய் தண்ணீர் திருமணி ஏரி வரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும்
பாலாற்றின் கவசம் பட்டு கிராமத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இன்னும் பல இடங்களில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோன்று தடுப்பணை கட்டுவதால் நிலத்தடி நீர் உயர்கிறது. இதனால் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கிறது. இந்த ஆண்டும் இன்னும் பல தடுப்பணை கட்டப்படும்.
எனக்கு நீர்வளத்துறைதான் வேண்டுமென்று நான் கேட்டு வாங்கிய துறை இது. கன்னியாகுமரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மோர்தனா அணை, ராஜா தோப்பு அணை, ஆண்டியப்பனூர் அணை என தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 அணைகள் திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் பேரணாம்பட்டு பகுதியில் பத்திரப்பள்ளி அணை கட்டி முடிக்கப்படும்” என்று கூறினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!