Tamilnadu
Pink Auto திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அதன் சிறப்பம்சங்கள் என்ன ?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட மகளிர் பயனாளிகளுக்கு 250 ஆட்டோக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டைகள், வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விருது மற்றும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நகர்ப்புற சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் 2.41 கோடி ரூபாய் மதிப்பிலான 50 மின் ஆட்டோக்கள் (e-auto), சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதல் கட்டமாக தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய 100 இளஞ்சிகப்பு நிற (Pink) ஆட்டோக்கள், தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய 100 ஆட்டோக்கள், என மொத்தம் 250 ஆட்டோக்களை பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஆட்டோக்களில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக காவல் துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS கருவியானது பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள், உதவி எண்கள் குறித்த விவரங்களும் இந்த ஆட்டோக்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!