Tamilnadu
"அரசியல் சாசனத்திற்கு எதிராக இந்தியை திணிக்கும் மோடி அரசு" : கனிமொழி MP குற்றச்சாட்டு!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரியில் ’பெண்களின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் தேசிய மாநாட்டு நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி MP,” தமிழ்நாடு அரசின் கருத்துக்களை கேட்காமல், தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்களை மதிக்காமல் மும்மொழிக் கொள்கை கொண்டு வந்து திணிப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியை திணிக்கவில்லை, குழந்தைகள் மும்மொழிக் கொள்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என கூறுவதையும் ஏற்கமுடியாது. உலக மக்களிடம் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக பயில வேண்டிய ஒரு மொழிதான் ஆங்கிலம். ஆனால் தமிழ் தாய் மொழி. நாம் யார் என்று நம்மை அடையாளப்படுத்தக்கூடிய, நம்மை புரிந்து கொள்ள கூடிய மொழி தமிழ்.
மற்றமொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இதை குழந்தைகள் முடிவு செய்ய வேண்டும். என்ன மொழி படிக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இந்தியை திணிக்கக் கூடாது. அரசியல் சாசனத்திற்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க அரசு இந்தியை திணிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !