Tamilnadu
”அண்ணாமலை அவர்களே முதலில் இதை Google-ல் செய்து பாருங்கள்” : தமிழன் பிரசன்னா சொல்வது என்ன?
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு:-
தமிழ்நாட்டின் நலன் மற்றும் வளர்ச்சியை தொடர்ச்சியாக தடுத்து நிறுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு என்ற பெயரில் காவி கும்பல் செயல்பட்டு வருகிறது. மேலும், மக்களை புறக்கணிப்பது மட்டுமில்லாமல் கட்சி தலைவர்கள் என்கின்ற பெயரில் தகுதியற்ற வார்த்தைகளை பேசி வருகிறார்கள்.
நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை ஏன் ஒன்றிய அரசு கொடுக்க தயங்குகிறது. ஒன்றிய அரசின் மாநில பிரதிநிதியாக இருந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியை அண்ணாமலை பெற்றுக் தராமல் இருப்பது ஏன்?. நமக்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை கேட்டால், அதற்கு பதிலாக இரு மொழிக் கொள்கையை கைவிட்டு மும்மொழிக் கல்வி கொள்கையை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டுகிறார். பா.ஜ.கவை தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள் என்ற காரணத்தால்தான் நம்பை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது.
எழுத்து வடிவம் கூட இல்லாத ஒரு மொழிக்கு கொடிக்கணக்கான ரூபாய் வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் எங்கள் தாய் மொழியை புறக்கணிக்க கூடிய நோக்கில் செயலாற்றக்கூடிய பாஜக அரசினை அன்றே கணித்து முத்தமிழ் கலைஞர் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடம் என உத்தரவிட்டிருந்தார்.
தமிழ்நாட்டில் யார் எங்கே பள்ளி நடத்தினாலும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்த சட்ட திருத்தத்தின்படி தமிழ் பாடம் என்பது கட்டாயம். இந்த அடிப்படை தரவு கூட தெரியாமல் தற்குறித்தனமாக ஆங்கில பாடம் கட்டாயம், தமிழ் பாடம் கட்டாயம் இல்லை என கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இந்த சட்டத்தை ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் மட்டுமே முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்த சட்டத்தினை எதிர்த்தார்கள். முதலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதனை கூகுள் இணையதளத்தை சென்று பார்க்கச் சொல்லுங்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சட்டம் செல்லும் என நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் என்பது இன்றளவும் உள்ளது.
தேர்தலை சந்தித்து மக்களின் பேராதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்த துணை அமைச்சரை, கவுன்சிலர் கூட ஆக முடியாத தற்குறி அண்ணாமலை ஒருமையில் பேசி விமர்சனம் செய்து வருகிறார். அரசியலில் ஒரு கண்ணியம் தேவை.எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது, மும்மொழிக் கொள்கை தேவை தானே என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ஒரு மணி நேரத்தில் அந்த பதிவினை டெலிட் செய்த வரலாறு இங்கு உள்ளது.
இவ்வாறு தமிழன் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!