Tamilnadu
PM SHRI நிதி குறித்து பொய் சொன்ன அண்ணாமலை : உண்மையை விளக்கிய TN Fact Check!
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நான் வாய் திறந்தாலே பொய் மட்டும்தான் பேசுவேன் என்பதைத் தினமும் நிரூபித்து வருகிறார். நீங்கள் பேசுவது அப்பட்டமான பொய் என கூறி அவருக்கு ஆதாங்களை கொடுத்தாலும் மீண்டும் பல் இளித்துக் கொண்டு வெட்கமே இல்லாமல் பொய் பேசி வருகிறார்.
தற்போது, PM SHRI திட்டத்துக்கான நிதி முழுவதும் ஒன்றிய அரசு வழங்குவதாகவும், மாநில அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை என்று மீண்டும் ஒரு பொய்யை செய்தியாளர்களிடம் உருட்டியிருக்கிறார்.
இதற்கு, TN Fact Check ஆதாரங்களுடன் அண்ணாமலையின் முகத்திரையை கிழித்துள்ளது. TN Fact Check எகஸ் பக்கத்தில், ”PM SHRI திட்டத்துக்கான நிதி முழுவதும் ஒன்றிய அரசு வழங்குவதாகவும், மாநில அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை என்று அண்ணாமலை சொன்ன தவறான தகவல்.
PM SHRI நிதி முழுவதும் ஒன்றிய அரசு வழங்குவதில்லை. 60:40 என்ற அடிப்படையில் 60% ஒன்றிய அரசும், 40% மாநில அரசும் பங்கிட்டுக் கொள்கின்றன. (திட்டத்தின் மொத்தத் தொகை - ரூ27,360 கோடி, ஒன்றிய அரசு பங்கு ரூ18,128 கோடி)
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 14,500 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். இதில், ஒன்றிய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளும் அடங்கும். இத்திட்டத்துக்கான ஒன்றிய அரசின் 60% பங்கும் 5 வருடங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 2022 - 2023 முதல் 2026 - 2027 வரை மட்டுமே நிதியுதவி வழங்கப்படும். அதன் பின்னர் அந்த பள்ளிகளுக்கான முழு செலவுகள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.
PM SHRI பள்ளிகளுக்கு முழு நிதியும் ஒன்றிய அரசு வழங்குகிறது, இத்திட்டத்தின் கீழ் 16,000 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என்று அண்ணாமலை சொன்னது தவறான தகவல்" என தெரிவித்துள்ளது.
Also Read
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!