Tamilnadu
”உங்கள் திமிரை தமிழ்நாடு அடக்கும்” : ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த இந்தியா கூட்டணி!
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்கத்துடிக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து, தி.மு.கழகம் தலைமையிலான கூட்டணி சார்பில் இன்று சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது:-
”ஒரு காலத்திலும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்காது. இருமொழி கொள்கையால் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. தொடர்ந்து வளருவோம். பா.ஜ.கவிற்கு அடிபணிய மாட்டோம். தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் தமிழ்நாட்டில் பா.ஜ.க கொடியே பறக்காது.”
மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி:-
”தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். பிரதமர் மோடி அவர்களே மாநில உரிமைகளை மதியுங்கள். இன்று இந்தியர்கள் அமெரிக்காவில் கையில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் ட்ரம்பிடம் சரணடைந்து கொண்டிருக்கிறீர்கள்.”
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்:-
”நாடாளுமன்றத்தில் நமது 40 MPக்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு பதில் கூட சொல்ல முடியாமல் சங்கி கூட்டம் திணறுகிறது. ஒக்கி, வர்தா,தானே போன்ற புயல்கள் வந்தால் பணம் இல்லை, சென்னை வெள்ளத்தில் மூழ்கினால் பணமில்லை, இயற்கை பேரிடர் பாதித்தால் பணமில்லை. இப்படி என் மண்ணுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்து வருகிறது ஒன்றிய அரசு”
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கொங்கு ஈஸ்வரன்:-
”உதய் மின் திட்டத்தில் சேர்ந்தால்தான் மின்சாரத்திற்கு பணம் கொடுப்பேன். இப்படி எல்லாவற்றிலும் black mail செய்து தற்போது கல்வியிலும் black mail செய்து வருகிறது பா.ஜ.க அரசு. இந்த அரசு black mail அரசாக உள்ளது.
CPI மாநில செயலாளர் முத்தரசன் :-
”இரு மொழி கொள்கை காலாவதியாகிவிட்டது என்று அண்ணாமலை கூறுகிறார். அண்ணாமலை அவர்களே இரு மொழிக் கொள்கை காலாவதியாகவில்லை, நீங்கள் தான் காலாவதியாகி விட்டீர்கள். இதுதான் உண்மை. தமிழ்நாட்டில் பா.ஜ.கவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் இந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள்."
CPM மாநில செயலாளர் பெ. சண்முகம்:-
”மும்மொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று எந்த சட்டத்திலும் இடமில்லை. எங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க ஒன்றிய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தொடர்ந்து நீங்கள் இவ்வாறு செயல்பட்டால் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக தமிழ்நாடே திரண்டு வரும்.”
விசிக தலைவர் தொல். திருமாவளவன்:-
”இந்தி மொழி என்பது அடிப்படையில் அது ஒரு மொழி அல்ல. தமிழ் மொழிக்கு எழுத்து இருப்பது போல், இந்தி மொழிக்கு எழுத்து கிடையாது. இந்தியாவில் இருக்கும் மொழிகளை அழித்து இந்தி மட்டும் தான் பேச வேண்டும் என நினைக்கிறார்கள். தமிழ்நாடு மீண்டும் ஒரு மொழிப் போராட்டத்தை நடத்தும், நிலை ஏற்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசை எச்சரிக்கினுற அறப்போராட்டம்தான் இது.”
மதிமுக பொதுச் செயலாளர் கைகோ:-
”ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இந்து சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஹிட்லர், முசோலினி,இடி அமீன் ஆகியோருக்கு ஏற்பட்டதுபோல் சர்வாதிகாரிகளுக்கும் இதே முடிவுதான் ஏற்படும். தமிழ்நாடு பொங்கி எழுந்துவிட்டது.அதன் அடையாளம்தான் இந்த ஆர்ப்பாட்டம்.”
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை:-
”எங்களுடைய மொழி, கலாச்சாரம், பன்பாடு ஆகியவற்றை சிதைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த ஆர்ப்பாட்டம். பா.ஜ.க 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை ஆரம்பித்துவிட்டு தேசத்தை சிதைப்போம், கூட்டாட்சி தத்துவத்தை முறிப்போம் என்றால் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். நீங்கள் தமிழ்நாட்டை தொட்டால் உங்களுக்கு ஷாக் அடிக்கும் என்பதை பலமுறை நிரூபித்துக் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு இருக்கிறார் மறக்க வேண்டாம்.”
தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி:-
”எந்த இந்தியை திணித்தாரோ ஆச்சார்யா, அவரே Hindi Never English Ever என்றார். அதை செய்து காட்டியது திராவிட இயக்க மேடை. தர்மேந்திர பிரதான் அவர்களே திமிர் தனமாக பேசாதீர்கள். உங்கள் திமிரை அடக்கும் சக்தி தமிழ்நாட்டு மண்ணுக்கு உண்டு.”
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!