Tamilnadu
ஈரோடு (கி) இடைத்தேர்தல் : “திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வீர்” - CPIM மாநிலச் செயலாளர் வேண்டுகோள்!
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா, கடந்த 2023-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியை மீண்டும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சூழலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2024, டிச.14 அன்று உயிரிழந்தார்.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் பிப்.5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறு என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் களமிறங்கியுள்ளார். தொடர்ந்து தேர்தல் பிரசாரம் இன்று (பிப்.03) மாலை 6 மணியோடு நிறைவடைகிறது.
இந்த நிலையில், உதய சூரியனுக்கு வாக்களிக்குமாரு ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிபிஐ (எம்) மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு 5.2.2025 அன்று நடைபெறும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திரு வி.சி. சந்திரகுமார் அவர்கள் போட்டியிடுகிறார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளப் பெருமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
Also Read
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !
-
முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது : இலங்கையில் நடப்பது என்ன?
-
ரம்மியை ஆதரித்த ஆர்.என்.ரவி இப்போது எங்கே போனார்? : முரசொலி சரமாரி கேள்வி!
-
"Likes கெத்து இல்லை! Marks, Degrees- தான் உண்மையான கெத்து" - மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை !
-
“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!