Tamilnadu
பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : முழு விவரம் இங்கே!
ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் இரண்டு சட்டமுன்வடிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
பின்னர் முதலமைச்சர் தாக்கல் செய்த இரண்டு சட்டமுன்வடிவுகளும் ஜனவரி 11 ஆம் தேதி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதலை அடுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட உள்ளது.
பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்தம் - தண்டனை விவரங்கள் :-
பாலியல் வன்புணர்ச்சிக்கு முன்னர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை .
நெருங்கிய உறவினர் (அ) காவல்துறை ஊழியர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் முன்னர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வைக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை .
12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் முன்னர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை (அ) ஆயுள் தண்டனை (அ) மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயுள் (அ) மரண தண்டனை.
பாலியல் வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்துக்கு முன்னர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயுள் தண்டனை.
கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி குற்றத்துக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண தண்டனை.
மீண்டும் மீண்டும் குற்றம் இழைத்தவர்களுக்கு குற்றத்துக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண தண்டனை.
Also Read
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!