Tamilnadu
“அந்த அமாவாசை எடப்பாடி பழனிசாமிதான்...” - அமைச்சர் செந்தில் பாலாஜி சாட்டையடி!
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதில் முனைப்புக்காட்டி வருகிறது. மேலும் திமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கும் மறைமுகமாக பாஜகவுடன் சாதித்திட்டம் தீட்டி வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எனினும் திராவிட மாடல் ஆட்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சூழலில்தான் பிப்.5-ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எப்படியும் திமுக தான் வெற்றிபெறும் என்பதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக புறமுதுகிட்டு ஓடியுள்ளார். இந்த நிலையில், திமுக ஆட்சி அமைய இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது பழனிசாமி பேசியுள்ளதற்கு, திமுகவினர், அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’ - ‘அமைதிப்படை’ படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் ‘அமாவாசை’ கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி.
பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, '’திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது’’ என நேற்று பேசியிருக்கிறார். ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.
’’2024-ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியும். மீண்டும் அதிமுக அரசு தமிழகத்தில் அமையும்’’ - 2022 பிப்ரவரி 12. சேலம், தாரமங்கலம்.
’’இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும்’’ - 2024 ஜனவரி 25. எக்ஸ் தள பதிவு.
’’திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள்தான். நாட்கள் எண்ணப்படுகின்றன’’ - 2024 செப்டம்பர் 20. X தளப்பதிவு.
இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு மாண்புமிகு தளபதிதான் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் உணர்ந்து கொள்வார்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!