Tamilnadu

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும்: மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு !

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புப் பேருந்துகள் மூலம் சென்னையிலிருந்து 8.73 இலட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவார்கள் என்பதால், நெரிசல் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 500 பேருந்துகளும் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) அறிவித்துள்ளது.

இது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, 19.01.2025 பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து (KCBT) மா.போ. கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், 20.01.2025 அன்று கிளாம்பாக்கத்தில் (KCBT) பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பாக்கப்படுவதால், கூடுதலாக 500 பேருந்துகள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் (KCBT) பேருந்து நிலையத்திலிருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பேருந்துகளுடன் சேர்த்து ஆக மொத்தம் 982 பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்து.

மேலும், 19.01.2025 அன்று பிற்பகல் முதல் 20.01.2025 வரை பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, MMBT, செங்குன்றம், எழும்பூர் இரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் இரயில் நிலையம் ஆகிய முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கத்தினை கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: பொங்கல் திருநாள்: சென்னையில் இருந்து மட்டும் 8.73 இலட்சம் பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் - TNSTC அறிவிப்பு !