Tamilnadu
10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு... ரூ.600 கோடியில் மதுரை மற்றும் திருச்சியில் அமையும் டைடல் பூங்கா!
சென்னை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வர, பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது தமிழ்நாடு அரசு. அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் உரையின் போது, திருச்சி மற்றும் மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திருச்சியில், திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் கிராமம் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்துக்கு அருகே புதிதாக டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்த டைடல் பூங்காவானது, 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.315 கோடியில் தரைத் தளம் மற்றும் 6 தளங்களுடன் அமையவுள்ளது.
மேலும் 18 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்காவில் 5000 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் அலுவலகம், கூட்ட அரங்கம், தரவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.
அதேபோல் மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய டைடல் பூங்கா அமையவுள்ளது. சுமார் ரூ.289 கோடியில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் மதுரை மற்றும் திருச்சியில் அமையும் புதிய டைடல் பூங்காவுக்கு கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!