Tamilnadu
குடியிருப்போர் சங்கத்தால் செல்லப் பிராணி வளர்ப்புக்கு தடை விதிக்க முடியுமா? நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
செல்லப் பிராணிகள் மலம் கழித்தால் 3 ஆயிரம் ரூபாய் வரை அபராதம், இயற்கை உபாதைகளுக்காக அழைத்துச் செல்ல லிப்ட் பயன்படுத்த தடை என அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளை ரத்து செய்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வரும் 78 வயது மூதாட்டி மனோரமா ஹிதேஷி என்பவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்க சார்பில் செல்லப் பிராணிகள் வளர்க்க கட்டுப்பாடுகள் விதித்து விதிகள் கொண்டு வந்தது.
அந்த விதிகளில், அடுக்குமாடி குடியிருப்பில் திறந்த வெளியில் செல்ல பிராணிகள் மலம் கழித்தால் அதை 10 நிமிடங்களில் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் இல்லாவிட்டால் முதல் முறை 1000 ரூபாயும், இரண்டாவது முறை 2000 ரூபாயும், மூன்றாவது முறை 3000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று முறைக்கு மேல், குடியிருப்பு வாசியின் பெயர் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பிராணிகள் சிறுநீர் கழித்தால், 250 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், இயற்கை உபாதைகளுக்காக திறந்தவெளிக்கு பிராணிகளை அழைத்துச் செல்ல லிப்ட்-டை பயன்படுத்த தடையும் விதித்து விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி மூதாட்டி மனோரமா, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை 16வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்தார். அப்போது, குடியிருப்பு வாசிகள் செல்ல பிராணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து கொண்டு வரப்பட்ட இந்த விதிகள், விலங்குகள் நல வாரிய விதிகளுக்கு முரணானது என மனோரமா தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், விலங்குகள் நல வாரிய விதிகள், அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களை கட்டுப்படுத்தாது என குடியிருப்போர் சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.குடியிருப்போர் சங்கம் முன் வைத்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, விலங்குகள் நல்அ வாரியத்தின் விதிகள் சட்டப்படி பிறப்பிக்கப்பட்டவை எனவும், பிராணிகள் மலம் கழித்தாலோ, சிறுநீர் கழித்தாலோ, அதை 10 நிமிடங்களில் சுத்தம் செய்யாவிட்டால் அபராதம் விதித்து நிறைவேற்றப்பட்ட விதிகள் செல்லாது என அறிவித்து உத்தரவிட்டார்.மேலும், பிராணிகளுக்கு அபராதம் விதிக்க தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!