Tamilnadu
ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் : 4,500 மி.லி. ரூ.500 மட்டுமே... ஆவின் நிர்வாகத்தின் அறிவிப்பு என்ன?
ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு ஐஸ்கிரீம் வகைகள் எளிதில் கிடைக்கும் வகையில் சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் ஆவின் ஐஸ்கிரீம் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டு அவ்விடங்களிலிருந்து 75 வகைகளுக்கு மேற்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் தரமாக உற்பத்தி செய்து அதனை தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் பாலை மட்டுமே கொண்டு உற்பத்தி செய்யப்படுவதால் பிற நிறுவன frozen desserts ஐஸ்கிரீம் வகைகளைக் காட்டிலும் ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் நுகர்வோர்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு சில மாதத்திற்கு முன்னர் இந்நிறுவனம் 4500 மிலி ஐஸ்கிரீம் வகைகளின் விற்பனை விலையை ரூ.600/- லிருந்து ரூ.500/- ஆகக் குறைத்துள்ளது. 4500 மிலி ஐஸ்கிரீம் வகைகளை பொதுமக்கள் தங்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளில் சுலபமாக 50-60 விருந்தாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கலாம்.
மேலும் உணவகங்கள், சமையல் கலை நிபுணர்கள் மற்றும் மில்க்ஷேக் விற்பனையில் ஈடுபடும் வணிகர்கள் ஆவின் 4500 மிலி ஐஸ்கிரீம் வகைகளை ஆவின் விற்பனை நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்து அதன் மூலம் தங்களது விற்பனையை அதிகளவில் பெருக்க உறுதுணையாக இருக்கும்.
இதுமட்டுமின்றி ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகளை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கொள்முதல் செய்வதன் மூலமாக 80 சதவிகித வருவாய் பால் உற்பத்தியாளர்களுக்கு நேரடியாகச் சென்றடைகிறது.
ஆவின் ஐஸ்கிரீம் வகைகளை தங்களது வணிக நிறுவனங்கள் மற்றும் இல்ல சுபநிகழ்ச்சிகளில் பயன்படுத்த தங்கள் அருகிலுள்ள ஆவின் பாலகத்தை அணுகி பயன்பெறலாம். மேலும் தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்ய கீழ்காணும் எண்ணை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு : 9944353459
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!