Tamilnadu
“அரசுப் பள்ளிகள் எங்கள் பிள்ளைகள்... ” - பரவிய வதந்திக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!
சென்னை தலைமைச்செயலகத்தில் சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை மற்றும் எதிர் காலத்தில் பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது,
அரசு பள்ளிகள் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தி தவறானது. தனியார் பள்ளிகள் சங்க நிகழ்ச்சியில் அவ்வாறு பேசியுள்ளேனா என்பதை தெரிந்துகொள்ளாமல் வெளியிடப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உறுதிப்படுத்தாமல் அறிக்கை வெளியிட்டவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
SSA நிதியை கொள்கைகளை விட்டுக்கொடுத்து ஒன்றிய அரசிடம் பணத்தை வாங்க வேண்டாம் என தெரிவித்தவர் முதலமைச்சர். பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி சுமையை ஏற்றுள்ளது.
தொடர்ச்சியாக தவறான செய்திகளை வெளியிட்டு ஒவ்வொரு முறை விளக்கம் அளித்து சோர்வடைகிறோம். பள்ளிக்கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகள். நாங்கள்தான் வளர்த்து எடுக்க வேண்டும். இதை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்வியை மாநில பட்டியலுக்கு கொடுத்து விடுங்கள், எங்களது பிள்ளைகளை நாங்களே வளர்த்துக்கொள்கிறோம்.
SSA நிதி வராத பட்சத்தில் திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பது தமிழ்நாடு அரசுக்கு விடுக்கும் மிரட்டலாகத்தான் பார்க்கிறோம். நம் பள்ளி நம் பெருமை திட்டத்தில் 540 கோடி சிஎஸ்ஆர் நிதி வந்துள்ளது. தற்போது வரை 350 க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இனி வரும் நிதியை பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் கழிவறையை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
தேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு தகவல் வந்தால் அதில் உண்மை தன்மை உள்ளதா என்பதை ஆராயமல் எக்ஸ் தளத்தில் பதிவிடுவது சரியா என்றும் தேசிய கட்சியின் தலைவர் ஒரு பதிவை உறுதிப்படுத்தாமல் பதிவிட்டால மற்றவர்கள் கிண்டலடிக்க மாட்டார்களா என கேள்வியெழுப்பினார். ரூ.44 ஆயிரம் கோடி என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ள இரண்டு மாதத்தில் மானிய கோரிக்கை அறிவிக்கிறேன் காத்திருக்கவும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஓடாத வண்டியாக இருந்த பள்ளிக்கல்வித் துறை தற்போது இந்த மூன்று ஆண்டுகளில் வண்டியை நகர்த்தி வருகிறோம். பழைய படத்தில் வருவது போல வண்டியை தள்ளு தள்ளு என குரல் மட்டும் கொடுக்கக் கூடாது அது அந்த வண்டி எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை வார்த்தையால் விளையாடக் கூடாது.
Also Read
-
நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் : நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அயலகத் தமிழர்களுக்கு விருதுகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
“இந்தித் திணிப்பைத் தமிழ்நாடு என்றைக்கும் எதிர்க்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
-
இந்தி தான் தேசிய மொழியா? - நடு மைதானத்தில் நடந்த காரசார விவாதம்... வர்ணனையாளர்களால் வெடித்த சர்ச்சை!
-
“இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்த சென்னை மாநகராட்சி” : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!