Tamilnadu
வள்ளுவர் வெள்ளி விழா ஆண்டு: கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை ஆகிய பகுதிகளுக்கு படகு சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை பகுதியில் கடும் கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு போன்றவை அடிக்கடி நிகழ்வது தொடர்கதையாகி வருகிரியாது.
இதன் காரணமாக விவேகானந்தர் பாறைக்கு மட்டும் சென்று வரும் சுற்றுலா பயணிகள், பெரும்பாலான நாட்களில் திருவள்ளுவர் பாறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக எழுந்தது.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் விதமாக கண்ணாடி பாலம் அமைக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.
அதற்கான பணிகள் விரைவு கதியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், வள்ளுவர் சிலை திறந்து 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அந்த கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் முத்தமிழறிஞர் கலைஞரால் 2000ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டு, வெள்ளி விழா காணும் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் முத்தமிழறிஞர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டு, திருவள்ளுவர் சிலைக்கு “பேரறிவுச் சிலை” (Statue of Wisdom) என பொறிக்கப்பட்ட கல்வெட்டையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .
இந்தியாவிலேயே முதன்முறையாக கடலின் நடுவே முக்கடல் சூழும் குமரியில், 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட கண்ணாடி இழைப் பாலம் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்தில் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு இப்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !
-
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! : விவரம் உள்ளே!