Tamilnadu
திருவண்ணாமலையில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலை : 1000 பேருக்கு வேலைவாய்ப்பு !
2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார். இந்த இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களையும் பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவில் முதலீடு மற்றும் சுமார் 30 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட்டில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மேஜர் ஷங்கிங் ( schwing stetter) ஷட்டர் சர்வதேச தொழிற்சாலையை அமைக்கப்பட உள்ளது. 52 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2,47,000 சதுர அடியில் 600 கோடி மதிப்பீட்டில் இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட உள்ளது.
இந்த தொழிற்சாலை மூலம் மேற்பட்டோருக்கு 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இந்நிறுவனத்தின் நான்கு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உலகளாவிய உற்பத்தி மையமாக மேற்கொள்ள செய்யாறிலும் இந்நிறுவனம் புதிய தொழிற்சாலை தொடங்க உள்ள உள்ளது. கான்கிரீட் மிக்ஸர் ,பம்ப், போர்(bore pump) பம்ப், ஹைட்ராலிக் மெஷின் உள்ளிட்டவைகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ஷங்கிங் ( schwing stetter) ஷட்டர் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!