Tamilnadu
பொங்கல் விலையில்லா வேட்டி, சேலை: ஜன. 10-க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் - கைத்தறித்துறை உத்தரவு!
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாடு மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை, கரும்பு, பரிசுத்தொகை மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை வழங்கவுள்ளதை முன்னிட்டு, ஜனவரி 10-க்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கைத்தறிதுறை அறிவுறுத்தியுள்ளது.
அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் 2025 பொங்கல் பண்டிகைக்கு 1,77,64,476 சேலைகளும், 1,77,22,995 வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்படுவது குறித்து பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் விலையில்லா வேட்டி, சேலைகளை ரேசன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறிதுறை அறிவுறுத்தியுள்ளது. 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1 கோடியே 77 லட்சம் சேலைகளும், ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சம் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.100 கோடி நெசவாளர்களுக்கு முன் பணம் வழங்கப்பட்டுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!