Tamilnadu
20 லட்சம் இளைஞர்களுக்கு AI பயிற்சி : Google நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அப்டேட் சொன்ன அமைச்சர் TRB ராஜா!
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.
அப்போது, கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மவுண்டன் வியூ வளாகத்தில் முதலமைச்சர் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் 20 லட்சம் இளைஞர்களுக்கு AI தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 20 லட்சம் இளைஞர்களுக்கு AI தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது.” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பணிகள் 100 சதம் சரியாக நடக்கும். கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 20 லட்சம் இளைஞர்களுக்கு AI தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!