Tamilnadu

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு : “பொதுமக்கள் பயப்பட தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சார்பில் உலக நீரிழிவு நோய் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “நீரிழிவு நோய் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்திய அளவில் 12 சதவீதம் இந்த நோய் தாக்குதலில் உள்ளனர். தமிழ்நாட்டில் 13 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் 30 ஆண்டுகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன் இருப்பினும் நான் மேற்கோள்ளும் பயிற்சிகளே நான் உறுதியாக இருக்க காரணமாக அமைந்துள்ளது.

பல ஓட்டபந்தையங்களில் பங்கு பெற்றுள்ளேன். இந்தியால் 31 மாநிலங்களில் கால்தடத்தை பதித்துள்ளேன். தொர்ச்சியாக நடப்பது போன்ற உடற்பயிற்சி காரணங்கள் தான் இந்த நீரிழிவு நோயில் இருந்து என்னை தற்பொழுது வரை பாதுகாத்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் இருப்பது போல health walk கட்டமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை.

மொழி தெரியாமல் வேறு மாநிலங்களில் இருப்பவர்கள் விழிப்புணர்வால் social media மூலம் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிப்படையும் 2500 குழந்தைகள் இன்சுலின் பெற்று வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் கன அடி வரை திறக்கப்படலாம். உபரி நீர் அடையாற்றில் திறக்கப்படுகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. பொதுமக்கள் பயப்பட தேவையில்லை பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.

Also Read: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முதல் உரை! : முன்வைத்த கருத்து என்ன?